Monday 6 March 2017

பி..எஸ்.என்.எல். நிறுவனத்தில்




பி..எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பணிக்கு 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேட்–2017 தேர்வின்அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் தமிழ்நாட்டிற்கு 103 இடங்களும். சென்னை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 37 இடங்களும், அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு 330 இடங்களும், கர்நாடகாவிற்கு 300 இடங்களும், மகாராஷ்டிராவில் 440 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.31–1–2017–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:


பி.இ., பி.டெக் படிப்புகளில் டெலி கம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் படித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இணையதளம் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். 6–3–2017 முதல் 6–4–2017–ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.  விண்ணப்பதாரர்கள் கேட்’ –2017 தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்   www.extrenalexam.bsnl.co.in    என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.