Friday 29 March 2019

New VDA for the Contract Labours issued by Govt.of India with effect from 01/04/2019.

ஊதியமே வந்தே பல மாதங்கள் ஆகின்றன  இதில் இது வேற ? என்று சலிப்புத் தட்டும் அளவிற்கு பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் நிலை உள்ளது இதற்கிடையில் அரசாங்கம் புதிய VDA விகிதத்தை  அறிவித்துள்ளது இந்த உத்தரவின்படி நமது ஒப்பந்த ஊழியர்கள் வரும் காலங்களில் பெறப்போகும் ஊதியத்தின் நிலை

UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு
A பிரிவு நகரத்தில்

நாளொன்றுக்கு ரூ.558/= என்றிருந்த
நாள்கூலி ரூ.584/= என
நாளொன்றுக்கு ரூ.26/=  உயர்ந்துள்ளது.

B பிரிவில்

நாளொன்றுக்கு ரூ.466/= என்றிருந்த
நாள்கூலி ரூ.487/= என
நாளொன்றுக்கு ரூ.21/= உயர்ந்துள்ளது.

C பிரிவில்

நாளொன்றுக்கு ரூ.373/= என்றிருந்த
நாள்கூலி ரூ.390/= என
நாளொன்றுக்கு ரூ.17/= உயர்ந்துள்ளது.

இதுவரையில் இவ்வளவு VDA உயர்வு  வந்தது கிடையாது நல்ல விஷயம் தான் ஆனாலும் நமது ஒப்பந்த ஊழியர்கள் இன்றைய நிலை என்னவென்றால்  குறைந்த பட்ச சம்பளம் தருகிறீர்களோ இல்லையோ, எங்களுடைய சம்பளத்தை குறைந்தபட்சம் தரவேண்டிய தேதிக்கு தாருங்கள் என்பதே !!!

தோழமையுடன்.                                                                              K.Neelamagam  JE

வாழ்த்துக்கள்



31.03.2019 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்
1.N.மோகன் JE தஞ்சை
2.N.மேகநாதன் TT தஞ்சை
3.M.ஜெயபால் TT தஞ்சை


      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...

Wednesday 27 March 2019

26.03.2019 இன்று NFTCL சார்பாக   தோழர்.மோகன் தோழர்.மேகநாதன் தோழர்.ஜெயபால் பணி நிறைவு பாராட்டு விழா தஞ்சையில் CTO வளாகத்தில் கிளை தலைவர் தோழர்.நீலமேகம் தலைமையில் 92 தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

அதன் நிகழ்வுகள்


































































Sunday 10 March 2019

தோழர்களே !
NFTCL தஞ்சை மாவட்ட  சங்கத்தின் மாவட்ட தலைவர் S.பிரின்ஸ் ,               மாவட்ட செயலாளர் S.இளங்கோவன், மாவட்ட பொருளர் இராஜேந்திரன் மாநில துணை செயலாளர் A. சேகர்  மற்றும் NFTE மாவட்டத் தலைவர் T.பன்னீர்செல்வம் கிளை செயலர் F.ஆரோக்கியதாஸ்
 நமது முதன்மை பொது மேலாளர் அவர்களை இன்று காலை                    09.03.2019 சந்தித்தோம்.   
ந்த மாதம் முதல் புதிய ஒப்பந்தகாரர் CIS BUREAUS FACILITY SERVICES PVT LTD ஒப்பந்தம் எடுத்துள்ளார்கள்.ஆகையால் மல்லி செக்யூரிட்டி 
ஒப்பந்தக்கார் AREA III ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் போனஸ் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட வேண்டும். EPF முழுமையாக கட்டப்பட வேண்டும். இவற்றை மல்லி செக்யூரிட்டி ஒப்பந்தக்காரர்  அவர்களிடம் செல்லி செய்து தருவதாக உறுதி அளித்தார். அதற்கு நான் முழு பொறுப்பு என்று கூறினார்கள்.
புதிய ஒப்பந்காரர் CIS BUREAUS FACILITY SERVICES PVT LTD          அவர்களிடம் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். AREA III உள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு ESI கார்டு வழங்கப்படவேண்டும்.
ஆள் குறைப்பு நடவடிக்கைக் எடுக்கக்கூடாது.போன்ற கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்
.நமது முதன்மை பொது மேலாளர் அவர்கள் கோரிக்கைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள் .
AREA I ஒப்பந்த ஊழியர்களுக்கு இம் மாத சம்பளம் திங்கள் ,செவ்வாய் கிழமை வழங்குவதாக பாண்டியன் ஒப்பந்ததாரர் கூறியுள்ளார் என்று முதன்மை பொது மேலாளர் அவர்கள்  உறுதி அளித்தார்கள்.

சில பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

                                                                                                        மாவட்ட சங்கம் 







வாழ்த்துக்கள்