Sunday 17 February 2019

16-2-2019 திருவாரூர் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடை பெற்றது







Saturday 16 February 2019

தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஊர்வலம் மணி மண்டபம் அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கி தொடர் முழக்கங்களுடன் மேரீஸ் கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை வந்தடைந்தது. விளக்கக் கூட்டமும் நடைபெற்றது அனைத்து சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.                          அதன் காட்சிகள்









Friday 15 February 2019

கண்ணீர் அஞ்சலி

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த நம் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். வந்தேமாதரம். #ஜெய்ஹிந்த். நீத்த
வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்.NFTE BSNL & NFTCL தஞ்சாவூர்.



Wednesday 6 February 2019

தஞ்சை மாவட்டத்தில் NFTCL

தஞ்சை மாவட்டத்தில் NFTCL .  மாவட்ட சங்கம் இல்லை என்று சொன்னார் கிள்ளிவளவன் இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்ட NFTE மாவட்ட செயலர் கிள்ளிவளவனுக்கு நன்றி....

நீங்கள் NFTE WEB SITEயில் NFTCW என்று போட்டு உள்ள யூனியன்தான ? நீங்கள் கூறி யது தோழர் ஜெகன் உருவாக்கி TMTCL சங்கத்தை நீங்களே குழிதோண்டி புதைத்து வீட்டீர்களா..

நீங்கள் நிரந்திர ஊழியர்களுக்கு தான் மாவட்ட செயலாளர் நினைவு கொள்ள வில்லை ஏன் என்றால் GPF BANK LOAN, LIC, SOECIETY ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடிக்கப்பட்ட பணத்தை அந்த அந்த இடத்திற்கு திருப்பி கொடுக்க போராட்டம் நடத்த வில்லையே?

தஞ்சை மாவட்டத்தில் NFTE தோழர்கள் ஒற்றுமையாக செயல்படுவதற்கு கவனம் செலுத்த வேண்டும். பிரிவினை போக்கு அடிப்படையில் பேசுவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும். இனிமேல் NFTCL பற்றி WEBSITE யில் போட்டால் பல உண்மைகளை வெளியே சொல்ல எங்களை துண்டாதே..

                                                                                                            மாவட்ட சங்கம்
தமிழகம் முழுவதும் BSNL நிருவனமும். ஒப்பந்தகாரும் இணைந்து நாடகம் ஆடுகிரார்கள்.ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதை கண்டித்து தமிழகமுழுவதும் NFTCL கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூர் NFTCL  தலைவர் K.நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட NFTCL பொருலாளர். P.ராஜேந்திரன்  முன்னிலை வகித்தார் மற்றும் NFTE கிளை செயலாளர்   Kதங்கமணி அவர்களும் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதியில் NFTCL மாநில செயலாளர் A.சேகர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.


Tuesday 5 February 2019

ஆர்ப்பாட்டம்

NFTCLதமிழகம் முழுவதும் BSNL நிருவனமும். ஒப்பந்தகாரும் இணைந்து நாடகம் ஆடுகிரார்கள்.ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதை கண்டித்து தமிழக முழுவதும் NFTCL கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.தஞ்சை & திருவாரூர் NFTCL மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட NFTCL செயலர் இளங்கோவன்   முன்னிலை வகித்தார் மற்றும் NFTE கிளை செயலாளர்   ஆரோக்கியதாஸ்,மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் மேகநாதன் அவர்களும் NFTCL மாநில அமைப்பு செயலர் ஆறுமுகம் ,மாவட்ட துணை செயலர் சந்தன கோபால் ,ஜெயபால் ஜெயராமன் ,ஆவூர் செல்வராஜ் ,செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதியில் NFTCL கிளை தலைவர் நீலமேகம் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நன்றி கூறி முடித்து வைத்தார்.
 அதன் நிகழ்வுகள்






Monday 4 February 2019

ஆர்ப்பாட்டம்

NFTCL தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஒவ்வொரு மாதமும் பிரச்சனையாக இருக்கின்றது வேலை வாங்கும் நிர்வாகத்திடம் கேட்டால்  ஒப்பந்ததாரரை கையை காட்டுகிறது ஒப்பந்ததாரரை கேட்டால் நிதி வரவில்லை என்கிறார் இந்த காரணங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவே பிரதிமாதம் 7-ஆம் தேதி சம்பளம் வழங்கக்கோரி 5-02-2019 செவ்வாய்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது . போராட்டத்தை வலுபெற செய்வோம்  உரிய தேதியில் சம்பளத்தை பெறுவோம்.
தோழமையுடன்
எஸ் ஆனந்தன் மாநில செயலாளர் தமிழ்நாடு