Monday, 25 June 2018

தோழர்களே
NFTCL தமிழகம் சார்பாக ஒரு கல்வி அறக்கட்டளை  ஒன்று நிறுவப்படுகிறது., . இந்த டிரஸ்டிற்கு அனைத்து தோழர்களும் தாராள நிதி உதவி அளித்து ஒரு நல்ல முயற்சியை ஊக்குவிக்க வேண்டுகிறோம். இது எந்த லாப நோக்கத்திற்கும் இல்லாத ஒரு பொது அறக்கட்டளை என்பது பெருமைப்படவேண்டியதாகும்.

நமது தொலைத்தொடர்புத் துறையில் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களது நியாயமான கோரிக்கைககளை வென்று அவர்களது வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அருமைத் தோழர் C.K.மதிவாணன் அவர்களின் நற்சிந்தனையில் உருவானதே NFTCL. அந்த அமைப்பு இன்று இந்தியாவெங்கும் பரவி வருகிறது.
சமீபத்தில் திருச்சி தோழர் காமராஜ் மேற்கொண்ட ஏழைகளின் கல்விக்கு உதவும் நற்செயலை பார்த்தவுடன், ஆற்றல் இருந்தும் பணமில்லாததால் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர். ஆகவே அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவ பாடுபடுவோம் என்ற தோழர் CKM அவர்களின் மேலும் ஓர் நற்சிந்தனையில்

"மனிதகுல மாணிக்கம் கார்ல் மார்க்ஸ் அறக்கட்டளை "
உருவாகி உள்ளது. மாமேதை மார்க்ஸைப் போல கற்றாரும் இல்லை; கற்றதை உழைக்கும் வர்க்கம் மேம்பட எழுதியோரும் இல்லை.
அவர் பெயரில் லாப நோக்கமற்ற கல்வி அறக்கட்டளை என்பது சாலச் சிறந்தது. அதேபோல., உலகப் பொதுமறையை இயற்றிய வள்ளுவப் பெருந்தகையின்
" கற்க கசடற! நிற்க அதற்குத் தக "
என்ற உயரிய லட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயலாற்ற துவங்கப்பட்டுள்ள அமைப்பின் பணி சிறக்க வாழ்த்தி உதவிக் கரத்தை நீட்டுவோம்!
Image may contain: one or more people and people standing


அம்பை செல்வோம்… அன்பை சொல்வோம்...
பணி நிறைவு விழா
காரைக்குடி NFTE மேனாள் மாவட்டச்செயலர்
NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்
தமிழ்மாநில உதவித்தலைவர்
அருமைத்தோழர். 
இரா.கணபதிராமன்
அவர்களின் பணிநிறைவு விழா
24/06/2018 – ஞாயிறு – காலை 10 மணி
அம்பாசமுத்திரம்.
சிறப்புரை
தோழர்.C.K.மதிவாணன்
NFTE அகில இந்திய உதவித்தலைவர்
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர்

 மற்றும் தலைவர்களும்... தோழர்களும்...

அம்பை செல்வோம்…
நம் அன்பைச் சொல்வோம்…
வாரீர்… தோழர்களே…


பெருநாள் நல்வாழ்த்துக்கள் 

ரம்ஜான்…
நோன்பு என்னும் மாண்பு சொன்ன…
இஸ்லாத்தின் புனிதத்திருநாள்..
இதுவே இன்பப்பெருநாள்…

 அனைவருக்கும் இனிய
ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

Thursday, 7 June 2018

தோழர். ஜெகன் 17.05.1931ம் ஆண்டு பிறந்த 75 ஆண்டுகள் வாழ்ந்து 07.06.2006 ஆண்டு மறைந்த மனித நேயப் போராளி தோழர். ஜெகன் மறைந்து 12ம் ஆண்டு நினைவு தினம் .
திருவாரூரில் நடந்த
நிகழ்வுகள்.


சர்வீஸ் SIMல் கூடுதல் வசதி (Non Executive)

1. தினமும் 1GB Data
2. 100 SMS Free Daily
3. எல்லா நெட்வொர்க்கும் வரம்பற்ற இலவச Voice call unlimited on all network.
National JCM November 2017 ல் நாம் விவாதித்ததின் அடிப்படையில் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


NFTCL மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்       நிகழ்வுகள்Wednesday, 6 June 2018

தோழர்.தார்... மறைந்தார்…அஞ்சலி NFTE இயக்கத்தின் அரசியல் வழிகாட்டியும்… டெல்லி மத்திய அரசு தலைமைச்செயலக ஊழியர் சங்கத்தின் ஆற்றல் மிகு பொதுச்செயலராகத் திறம்படப்பணியாற்றியவரும்… AITUC சங்கத்தின் தேசிய செயலரும்… தொழிலாளர் உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை சந்தித்தவருமான… அருமைத்தோழர். GL.தார் அவர்கள் மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்… நல்லடக்கம் இன்று மாலை டெல்லியில் நடைபெறுகின்றது

Sunday, 3 June 2018

தோழர்களே. 
நம் NFTCL தஞ்சை மாவட்ட சங்கத்தின் சார்பில் CTO தொலைபேசி நிலையத்தில் வரும் 05.06.18 செவ்வாய் கிழமை மாலை 04.00 மணியளவில் மாவட்ட செயற்குழு சிறப்புக் கூட்டம் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் வருக. 
                                                                                                                   மாவட்ட செயலாளர்

Wednesday, 30 May 2018

வாழ்த்துக்கள்31.05.2018 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

 1. D.JAYALAKSHMI                 OS(G)     TNJ
 2.R.BALASUBRAMANIYAN    TT          AYP
 3. L.RAMACHANDRAN             TT         ARP
 4. T.GOVINDARAJ                      TT         TNJ
 5.  V.KANNAN                              TT        AYB
6.T.DURAIMANICKAM               TT        TNJ
7.G.GUNASUNDARI                     OS        TVN
8.V.CHANDRASEKARAN            TT        KDV
9.K.KALAIVANAN                        TT       TNJ
10.T.JAYARAJ                                OS       ONT
11.S.MADHAVAN                         AOS     TNJ
12.G.GUNASEKARAN                   TT       TVN
13.R.RAJENDRAN                          TT       VRM
14.R.GOVINDARAJU          VRS    TT      TNJ     
 

            அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...

Tuesday, 29 May 2018

தஞ்சை SDOPயில் பணிநிறைவு பாராட்டு விழா

28.05.18 அன்று சிறப்புடன் நடந்த  தோழர்.T. துரைமாணிக்கம் பணிநிறைவு பாராட்டு விழாவில் தோழர். பிரின்ஸ் ,தோழர் .பன்னீர்செல்வம் ,தோழர். மேகநாதன்,தோழர்.ஆரோக்கியதாஸ் தோழர்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார் கள்.


Monday, 7 May 2018

07.05.2018 இன்று  மாலை 04 மணிக்கு தனி டவர் கம்பெனி அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து CTO வில் தெரு முனைப் பரப்புரை நடந்தது அதன் காட்சிகள்.

Tuesday, 1 May 2018

தஞ்சை SDOPயில் மேதின கொடியேற்று விழா NFTE, NFTCL


பாபநாசம்   &     திருவாரூர்