Friday 30 September 2016

01/10/2016 BSNLக்கு பிறந்த நாள்...

அனைவருக்கும் 
BSNL உதயதின 
நல்வாழ்த்துக்கள்...
ஒப்பந்த ஊழியர் VDA
விலைவாசிப்படி உயர்வு

01/10/2016 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 
VDA  விலைவாசிப்படி 
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.
UNSKILLED LABOUR 

A பிரிவு நகரம்
ரூ.368/- லிருந்து ரூ.374/= ஆக 6 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு 

B  பிரிவு நகரம் 
ரூ.307/- லிருந்து ரூ.312/= ஆக 5 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு

C  பிரிவு நகரம் 
ரூ.246/- லிருந்து ரூ.250/= ஆக 4 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு

Wednesday 28 September 2016

Either perform or take VRS’

                                                                    

– Manoj Sinha to BSNL and its employees




Manoj Sinha, Communications Minister yesterday told the 
BSNL Management and employees to perform well. 

He also spoke about ‘performance related pay’ and VRS for inefficient employees’.

BSNL
முதன்மை பொது மேலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய நமது துறையின்    அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா

 "
பணியாற்றுங்கள், இல்லை என்றால் விருப்ப ஓய்வில் 
செல்லுங்கள் " என்று மிரட்டும் தொனியில் உரையாற்றி
உள்ளார்.  

GPF

விண்ணப்பித்த யாரும் அதை cancel செய்ய வேண்டாம். நிதி ஒதுக்கீடு வந்தவுடன் அக்டோஎர் முதல் வாரத்தில் GPF கிடைக்கலாம்.

Sunday 25 September 2016

இரங்கல் 
திருமதி.மாலதி சுப்பராயன் 
NFTE மாநிலப்பொருளரும் 
கோவை மாவட்டச்செயலருமான 
அன்புத்தோழர். சுப்பராயன் 
அவர்களின் துணைவியார் 

திருமதி.மாலதி 
அவர்கள்  24/09/2016 அன்று 
உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.
துணை இழந்த தோழனின் 
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம்..

 தஞ்சை மாவட்டத்தோழர்கள் 
சார்பாக ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகிறோம்.

Thursday 22 September 2016

GPF வரும்! ஆனால் இந்த மாதம் வராதாம்!!







       
19-09-2016 அன்று CML அவர்களை நமது பொது செயலர் தோழர். C  சிங் சந்தித்து இம்மாத GPF வழங்குவதற்கான நிதியை உடன் ஒதுக்கீடு செய்யும் படி கோரினார். ஆனால் இம்மாதம் வழங்க இயலாது எனவும், அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு முன் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
      இது ஊழியர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல தோழர்கள் கடந்த இரண்டு மாதமாக GPF பெற முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
       
இதனிடையே ஜனவரி 2017 முதல் GPF பட்டுவாடா வேலைகளை  DOT நேரடியாக எடுத்துக்கொள்ளும் என செய்திகள் உலா வருகின்றது.
 பண்டிகை முன்பணம் (Festival Advance)
தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக்கு பண்டிகை முன்பணம் (Festival Advance) பெற விரும்புபவர்கள் 01-10-2016 - குள் விண்ணப்பிக்கவும். அதன் பிறகு விண்ணப்பித்தால் முன்பணம் கிடைக்க வாய்ப்பில்லை.



ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.