Wednesday 25 November 2015

WORKS COMMITTEE

30-11-2015 காலை 11-மணியளவில் தஞ்சை GM அலுவலகத்தில்,
WORKS COMMITTEE கூட்டம் நடைபெறும்.

Tuesday 24 November 2015

பிஎஸ்என்எல் நேசம் கோல்டு 500க்குதான் முழு டாக்டைம்






பிஎஸ்என்எல் நேசம்கோல்டு திட்டத்தில் முழு டாக்டைம் குறைந்த பட்ச ரீசார்ஜ் 500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் நேசம் கோல்டு திட்டம் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு 50 எம்பி டேட்டா, 25 எஸ்எம்எஸ் மட்டுமின்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேச 5 எண்களை இணைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் இணைப்பு வாங்கும்போது இலவச நிமிடங்களும் உண்டு. பல்வேறு பலன்கள் அடங்கிய நேசம் கோல்டு பிளானுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இதையடுத்து இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. அதேநேரத்தில் முழு டாக்டைம் சலுகையாக இந்த திட்டத்தில் முன்பு குறைந்த பட்சம் 200 ஆக இருந்தது. 200 மடங்குகளில் 400, 600 என ரீசார்ஜ் செய்யும்போது முழு டாக்டைம் கிடைக்கும். தற்போது இதை 500ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நேற்று அமலுக்கு வந்துள்ளதுதனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 100க்கு கூட முழு டாக்டைம் வழங்கும்போது, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பிஎஸ்என்எல் சேவையில் இருந்து வெளியேற தூண்டுவதுபோல் ஆகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Thursday 19 November 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயர்வு: சம்பள கமிஷன் பரிந்துரை,



புதுடெல்லி,



மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.



இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கையை இன்று ஊதிய குழுவின் தலைவர் ஏகே மாத்தூர், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயவு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,  வருடத்திற்கு 3 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் அளிக்கவும்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 



மேலும், வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 52 விதமான படிகளை ரத்து செய்யவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது