Monday, 20 March 2017

தத்துக்குழந்தை விடுப்பு

CHILD ADOPTION LEAVE
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை
தத்து எடுத்து வளர்க்கும்
பெண் ஊழியர்களுக்கும்...
ஆண் ஊழியர்களுக்கும்...
விடுப்பை அதிகரித்து BSNL நிர்வாகம்
20/03/2017 அன்று உத்திரவிட்டுள்ளது.

பெண் ஊழியர்களுக்கு
தற்போதுள்ள 135 நாள் விடுப்பு
180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண் ஊழியர்களுக்கு...
15 நாட்கள் PATERNITY LEAVE 
தந்தையர் விடுப்பு அளிக்கப்படும். 
குழந்தையை தத்து எடுத்த
ஆறு மாத காலத்திற்குள்
தந்தையர் விடுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை இல்லாதவர்களும்,
2 குழந்தைகளுக்கு குறைவாகப் பெற்றவர்களும்
குழந்தையைத் தத்து எடுப்பதன் மூலம்...
மேற்கண்ட விடுப்பை அனுபவிக்கலாம்.