Sunday 29 April 2018

தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

Friday 27 April 2018

வாழ்த்துக்கள்


30.04.2018 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

 

 1. S.VIJAYAKUMAR             DGM   THANJAVUR
 2. R.JAMBUNATHAN            TT       THANJAVUR
 3. M.DEVADOSS                    TT       RAJAGIRI
 4. S.CHANDRAKUMARI       DGM  THANJAVUR
 5. S.NEELAVATHI                  OS      MANNARGUDI
 6. S.KALYANASUNDARAM TT      THANJAVUR
 7 S.RAJALAKSHMI   SR.SS(OP)     THANJAVUR
 8. A.RAMAMURTHY              TT     THANJAVUR
9. R.MUTHURAJA     SR.TS(OP)     THANJAVUR
10. K.VEDANAYAGAM           TT     VEDARANYAM
 

          











  அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...


Tuesday 24 April 2018

JE(TTA) இலாக்காத் தேர்வு முடிவுகள்




தேர்ச்சியும்... அதிர்ச்சியும்...



28/01/2018 அன்று நடைபெற்ற JE(TTA) இலாக்காத்தேர்வு முடிவுகள் இன்று 23/04/2018  CORPORATE அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்தியா முழுவதும் 9145 காலியிடங்கள் இருந்தன. 

ஆனால் நாடு முழுக்க 95 தோழர்கள் 

மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 



தேர்வில் கண்டறியப்பட்ட பல குளறுபடிகளை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியும் பலன் ஏதுமில்லை. குளறுபடிகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட நிபுணர் குழு 100 கேள்விகளில் 9 கேள்விகளில் மட்டுமே பிழைகள் இருப்பதாக அறிவித்தது. தொழிற்சங்கங்களும், தனிநபர்களும் சுட்டிக்காட்டிய குளறுபடிகளில் 

உண்மையில்லை என்று நிர்வாகம் மறுதலித்துள்ளது.


மேலும்... வெற்றி பெற்ற தோழர்கள் அவர்களது பதவி 

எந்நேரமும் பறிக்கப்படலாம் என்பதை அறிந்திருப்பதாக 

நிர்வாகத்திற்கு UNDERTAKING தரவேண்டும். 



தமிழகத்தில் OC/OBC பிரிவில் 4 தோழர்களும்… 

SC பிரிவில் ஒரு தோழரும், 

ST பிரிவில் ஒரு தோழரும் வெற்றி பெற்றுள்ளனர். 

சென்னைத்தொலைபேசியில் ஒரேயொரு 

தோழர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளார்.





வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.



தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்

M.செல்வகுமார் - OC

விஜயகுமார் துரைசாமி -OBC

AS.குருபிரசாத் - OBC

S.ஜூலி - SC

D.சுரேஷ்குமார் - SC

P.சந்திரன் - ST



மொத்தக் காலியிடங்களில் சுமார் ஒரு சத ஊழியர்கள் மட்டுமே தங்கள் பதவி உயர்விற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

இது வருத்தத்தின் உச்சமாகும். அதிர்ச்சியின் அதிகபட்ச அளவாகும். 



அந்தமான், பீகார், ஜம்மு காஷ்மீர், ஒரிசா, கொல்கத்தா பகுதிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.  JE நேரடி நியமனத்தில் பல்வேறு  மாநிலங்களில் இருந்து தோழர்கள் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பணி புரிகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களில் இலாக்காத் தேர்வில் ஒருவர் கூட தேறவில்லை என்பது சிந்திக்க வைக்கிறது. 



JE பதவிகளில் இலாக்கா ஊழியர்களை ஓரங்கட்டி… 

வெளியாட்களை நியமனம் செய்வதற்கான

 மறைமுக ஏற்பாடாகவே நமது இலாக்காத் தேர்வுகளும்… 

அதன் முடிவுகளும் இருப்பதாக நமக்குப் புலப்படுகின்றது.


Monday 23 April 2018

காவரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சையில் அனைத்து கட்சி மனித சங்கிலி போராட்டம் NFTE,NFTCL கலந்து கொண்டனர்











Sunday 22 April 2018

மனிதசங்கலி போராட்டம்


NFTE & NFTCL  தோழர்கள் பல அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்டுள்ள மனிதசங்கலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது. . காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்ற  ஆணைபடி  உடனடி அமைக்க வலியுறுத்தி வரும் 23-04-2018 அன்று இதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளதுஇதில் நமது சங்கத் தோழர்கள் தங்களை தவறாமல் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளன. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இது மாலை 4 மணிமுதல் 5 மணிவரை நடைபெறுகிறது.

 
தவறாமல் பங்கெடுப்பீர்!!