Tuesday 23 July 2019

இன்று (23/07/19) மதியம் நான் கிண்டியில் நடந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று விட்டு சங்க அலுவலகத்திற்கு திரும்புகையில் புதுடில்லியில் உள்ள வட்டார தொழிலாளர் ஆணணயர் ( Regional Labour Commissioner) அலுவலகத்தில் இருந்து என்னிடம் செல்பேசியில் தொடர்பு கொண்ட ஒரு அதிகாரி பதட்டத்துடன் பேசினார். அவர் என்னிடம் மத்திய தொழிலாளர் அமைச்சர் அவர்களிடம் உங்கள் NFTCL சம்மேளனம் சில தினங்களுக்கு முன்பு கொடுத்த புகார் கடிதத்தின் மீது தேவையான உடனடி நடவடிக்கை எடுக்க RLC புதுடெல்லி அவர்களுக்கு அமைச்சர் சந்தோஷ் கேங்வார் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் 26-07-2019 ( வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் RLC அவர்கள் தங்களுடனும் பிஎஸ்என்எல் நிர்வாகத்துடனும் ஆலோசனை கலக்க கூட்டம் ஒன்றை அழைத்துள்ளார். இந்த கூட்டத்தில் தாங்களும் NFTCL சம்மேளனத்தின் சார்பில் மூவரும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நமது தேசிய தலைவர் ஆஷிக் அஹமது அவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு கீழ்க்கண்ட நான்கு தோழர்கள் டில்லியில் ஜுலை 26 ல் RLC கூட்டியுள்ள முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது.
1) தோழர் ஆஷிக் அஹமது( தேசிய தலைவர்)
2) தோழர் சி.கே.எம் ( பொதுச் செயலாளர்)
3) தோழர் ஆனந்தன் ( தமிழ்நாடு மாநிலச் செயலாளர்)
4) தோழர் சர்மா ( டில்லி மாநிலச் செயலாளர்)
மத்திய அமைச்சர் சந்தோஷ் கேங்வார் அவர்களின் துரித நடவடிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பல மாதங்களாக சம்பளம் பெறாது துன்பக்கடலில் மூழ்கி இருக்கும் பாவப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என உறுதியாக நம்புகிறேன்.