Tuesday 24 May 2016

தமிழ் மாநில மாநாடு 

தலைமைப்பண்பில்...
தலைசிறந்த...
தமிழ் மாநிலச்சங்கத்தின்..

தமிழ் மாநில மாநாடு

ஜூலை 21 & 22  - வேலூர்

கொடி உயர்த்திடுவோம்...
கோட்டையில் கூடிடுவோம்...

சங்க அங்கீகாரம் மற்றும் கவுன்சில் உத்தரவு வெளியானது

அங்கீகார உத்திரவுகள் 

நடந்து முடிந்த ஏழாவது  BSNL தொழிற்சங்க 
அங்கீகாரத் தேர்தல் முடிவுகளையொட்டி 
வெற்றி பெற்ற சங்கங்களுக்கான 
அங்கீகார உத்திரவை BSNL நிர்வாகம் 
இன்று 19/05/2016 வெளியிட்டுள்ளது.

அங்கீகாரம் பெறும் முதன்மைச் சங்கம் - BSNLEU 
அங்கீகாரம் பெறும் இரண்டாவது சங்கம் - NFTE BSNL 
அங்கீகார காலம்: 19/05/2016 முதல் 18/05/2019 வரை மூன்று ஆண்டுகள் 

அங்கீகார வசதிகள்:
  • நோட்டீஸ் போர்டு  
  • தொலைபேசி வசதி 
  • மாற்றல்  இருந்து விதிவிலக்கு
  • கவுன்சில்  கூட்டுக்குழுவில் உறுப்பினர் நியமனம் 
  • ஸ்பெஷல் காசுவல் லீவ் 
  • சம்பளத்தில் சந்தாப்பிடித்தம் 
  • ஊழியர் சம்பந்தபட்ட உத்திரவுகளின் நகல்களை வழங்குதல்

2 சதத்திற்கும் அதிகமாக...
 7 சதத்திற்கும்  குறைவாக...
வாக்குகள் பெற்ற  
FNTO மற்றும் BTEU  சங்கங்களுக்கு 
கீழ்க்கண்ட வசதிகள் வழங்கப்படும்.

  • நோட்டீஸ் போர்டு வசதி  
  • தொலைபேசி வசதி 
  •  சந்தாப்பிடித்தம் 

கவுன்சில்களில் இடங்கள் 

அகில இந்தியஅளவிலும்... 
மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அளவிலும்...
JCMல் BSNLEUவிற்கு 9 இடங்களும் 
NFTEக்கு 5 இடங்களும் ஒதுக்கப்படும்.

JCM உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்
உறுப்பினர்களாக இருக்க வேண்டும். 
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் 
மறுசீரமைப்பு செய்யப்படும்போது 
 JCM குழுவும் அதற்கேற்றவாறு 
மறுசீரமைப்பு செய்யப்படும்.

.