Tuesday, 31 May 2016
Monday, 30 May 2016
Saturday, 28 May 2016
Tuesday, 24 May 2016
தமிழ் மாநில மாநாடு
தலைமைப்பண்பில்...
தலைசிறந்த...
தமிழ் மாநிலச்சங்கத்தின்..
தமிழ் மாநில மாநாடு
ஜூலை 21 & 22 - வேலூர்
கொடி உயர்த்திடுவோம்...
கோட்டையில் கூடிடுவோம்...
சங்க அங்கீகாரம் மற்றும் கவுன்சில் உத்தரவு வெளியானது
அங்கீகார உத்திரவுகள்
நடந்து முடிந்த ஏழாவது BSNL தொழிற்சங்க
அங்கீகாரத் தேர்தல் முடிவுகளையொட்டி
வெற்றி பெற்ற சங்கங்களுக்கான
அங்கீகார உத்திரவை BSNL நிர்வாகம்
இன்று 19/05/2016 வெளியிட்டுள்ளது.
அங்கீகாரம் பெறும் முதன்மைச் சங்கம் - BSNLEU
அங்கீகாரம் பெறும் இரண்டாவது சங்கம் - NFTE BSNL
அங்கீகார காலம்: 19/05/2016 முதல் 18/05/2019 வரை மூன்று ஆண்டுகள்
அங்கீகார வசதிகள்:
அங்கீகாரம் பெறும் இரண்டாவது சங்கம் - NFTE BSNL
அங்கீகார காலம்: 19/05/2016 முதல் 18/05/2019 வரை மூன்று ஆண்டுகள்
அங்கீகார வசதிகள்:
- நோட்டீஸ் போர்டு
- தொலைபேசி வசதி
- மாற்றல் இருந்து விதிவிலக்கு
- கவுன்சில் கூட்டுக்குழுவில் உறுப்பினர் நியமனம்
- ஸ்பெஷல் காசுவல் லீவ்
- சம்பளத்தில் சந்தாப்பிடித்தம்
- ஊழியர் சம்பந்தபட்ட உத்திரவுகளின் நகல்களை வழங்குதல்
2 சதத்திற்கும் அதிகமாக...
7 சதத்திற்கும் குறைவாக...
வாக்குகள் பெற்ற
FNTO மற்றும் BTEU சங்கங்களுக்கு
கீழ்க்கண்ட வசதிகள் வழங்கப்படும்.
- நோட்டீஸ் போர்டு வசதி
- தொலைபேசி வசதி
- சந்தாப்பிடித்தம்
கவுன்சில்களில் இடங்கள்
அகில இந்தியஅளவிலும்...
மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அளவிலும்...
JCMல் BSNLEUவிற்கு 9 இடங்களும்
NFTEக்கு 5 இடங்களும் ஒதுக்கப்படும்.
JCM உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்
உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள்
மறுசீரமைப்பு செய்யப்படும்போது
JCM குழுவும் அதற்கேற்றவாறு
மறுசீரமைப்பு செய்யப்படும்.
.
Friday, 13 May 2016
தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள்
நடந்து முடிந்த சங்க அங்கீகாரத்தேர்தலின்
அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று
13/05/2016 வெளியிடப்பட்டுள்ளன.
31/03/2016 அன்று...
மொத்த வாக்காளர்கள் 164244 ஆகும்.
BSNLEU சங்கம் 31/03/2016க்குப்பின்
JTO பதவியில் நியமனம் செய்யப்பட்டவர்கள்...
இறந்து போன ஊழியர்கள்...
வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றவர்கள்
மற்றும் காசியாத்திரை சென்றவர்கள்..
ஆகியோரை மொத்த வாக்காளர்கள்
கணக்கில் இருந்து கழிக்க வேண்டும்
என கோரிக்கை வைத்தது.
காரணம் மொத்த வாக்காளர்கள் கணக்கில்
50 சதம் வாக்குகளைப் பெற்று விட்டால்
தான்.. ஒரு சங்கம் மட்டுமே BSNLலில்
காலத்தைக் கழித்து விடலாம் என்று
BSNLEU மனப்பால் குடித்தது.
மனப்பால் BSNLEUவின் மகத்தான கோரிக்கை
நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
424 வாக்காளர்கள் கழிக்கப்பட்டு
மொத்த வாக்காளர்கள் 163820 என்று கணக்கிடப்பட்டு
அதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ முடிவுகள்
இன்று வெளியிடப்பட்டுள்ளன.
சில துளிகள்:மொத்த வாக்காளர்கள் : 163820
வாக்களித்தவர்கள் - 153840
வாக்களிக்காதவர்கள் - 9980 - 6.1 சதம்
செல்லாத வாக்குகள் - 1395
செல்லுபடியான வாக்குகள் - 152445
NFTE - 52637 - 31.97 சதம்
BSNLEU - 81195 - 49.56
FNTO - 8697 - 5.31 சதம்
BTEU BSNL - 4846 - 2.96 சதம்
எந்த சங்கமும் 50 சதத்திற்கும் மேல் வாக்குகள் பெறாததால்...
15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற
NFTE மற்றும் BSNLEU சங்கங்கள்
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Thursday, 12 May 2016
அகில இந்தியத் தேர்தல் முடிவுகள்
மொத்த வாக்குகள் 164244
மொத்த வாக்குகளில்..
நமது NFTE சங்கம்
ஏறத்தாழ 52172 வாக்குகளைப் பெற்று
31.7 சதமும்
BSNLEU சங்கம்
ஏறத்தாழ 81165 வாக்குகளைப் பெற்று
49.4 சதமும் பெற்றுள்ளன.
BSNLEU சங்கம் 50 சதத்தை அடையவில்லை.
அதனால்...
BSNL நிறுவனமும்... BSNL ஊழியர்களும்
பெரும் பேராபத்திலிருந்து தப்பியுள்ளனர்.
பேராபத்தில் இருந்து
தப்பிப்பிழைத்துக்கொண்ட
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்...
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Subscribe to:
Posts (Atom)