Friday, 14 November 2014

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு



நம் நாடு உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு. சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு இங்கு சர்க்கரை  நோயாளிகள் அதிகம் உள்ளனர். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு வகைகளும், போதிய உடற்பயிற்சியும் இல்லாததால் தான்அதனால் நம் உணவு பழக்கவழக்கங்களை மாற் றிக் கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க வாய் ப்புள்ளது.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பு, கொலஸ்டிரால் போன்ற நோய்களும் உடன் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சர்க்கரை  நோயாளிகள் இதனையும் கண்டுபிடித்து கட்டுப்படுத்தி கொள்வது அவசியம்.


தேரேகால்புதூர் மனுவேல் மருத்துவமனை சர்க்கரை நோய் மையத்தில் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகி றது. இங்கு 24 மணி  நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ள வர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து டாக்டர்  கே.எம்.சிவகுமார் கூறியதாவது
;

உணவில் சேர்க்க வேண்டியவை:

*
கொண்டைக் கடலை, கடலை, பச்சைப் பட்டாணி, காராமணி, சோயாபீன்ஸ் வகைகள் போன்றவற்றை மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்கு மேற்  படாமல் சமைத்து சாப்பிடலாம்.

*
மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்கு மேற்படாமல் கோழிக்கறி, மீன், இறைச்சி வகைகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை  சாப்பிடலாம்.

*
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை:

*
நிலத்திற்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், உதாரணமாக கேரட், பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, கருணைக் கிழங்கு, உருளைக் கிழங்கு, சேனைக்  கிழங்கு, நிலக்கடலை போன்ற வற்றை தவிர்க்கவும்.

*
முட்டையின் மஞ்சள்கரு, ஆட்டிறைச்சி.

*
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு.

நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:

*
மதுபானங் கள், புகை யிலை, பீடி, சிகரெட், பாக்கு, ஜரிதா பீடா
*
எண்ணெயில் செய்த உணவுகள் (உதாரணம்) பூரி, வடை, அப்பளம், புரோட்டா, வருவல், பக்கோடா.
*
எல்லாவித கிழங்கு வகைகள் (உதாரணம்) சேனை, உருளை.
*
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நிலக்கடலை.
*
ஹார்லிக்ஸ், விவா, ஓவல்டின், போர்ன்விட்டா.