Friday 21 November 2014

இன்று சர்வதேச மீனவர்கள் தினம்!


மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997-ல் டெல்லியில் கூடி விவாதித்து  உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன் பிடித் தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.

இதன்மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டுவரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள், பாரம்பரிய மீனவர்கள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளான நவம்பர் 21-ம் தேதிதான்சர்வதேச மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செய்தனர். உலகில் பறந்து விரிந்து கிடக்கும் கடலை நம்பி பல இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்கு தேவையான உணவு பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை கிடைப்பது குறிப்பிடத்தக்கது......