Monday 24 June 2019

NFTCL சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இன்று நமது பொதுச்செயலர் சி.கே.மதிவாணன் ( General Secretary of NFTCL ) மற்றும் செயல் தலைவர் தோழர்.ராமகிருஷ்ணனும் ( NFTCL ) கோவை மூத்த வழக்கறிஞர் குணாலன் அவர்களை சந்தித்தனர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்களூக்கு மாதந்தோறும் 7ம் தேதி சம்பளம் வழங்காத தலைமை பொது மேலாளர்கள் தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசியை எதிர்த்தும் உடனே நான்கு மாத சம்பளத்தை வழங்கக் கோரியும் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வரும் திங்கட்கிழமை வழக்கு தொடர இருப்பதால் மாநிலச் செயலர் தோழர்.ஆனந்தன் கடலூரிலிந்து சென்னைக்கு அதற்கு தேவையான தஸ்தாவேஜ்களுடன் புறப்பட்டு வந்தார்.

எப்படியும் சம்பளமின்றி தவிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மற்றும் கேசுவல் ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கித் தருவது நமது கடமை. 

இதுவரை தர்ணா, வாயில் கூட்டங்கள் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் செய்தும் எந்த பயணும் விளையாத காரணத்தால் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதைத் தவிர  வேறு வழியில்லை என்பதால் இந்த முறை நீதிமன்றத்தை அணுகுகிறோம்.

நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நிர்வாகம் சாதாரண அடிமட்ட தோழர்களுக்கு சம்பளம் தராமல் இழுக்கடிப்பது நியாயமா?
Image may contain: 3 people, people smiling, people sitting