Monday 26 February 2018

துயர் துடைப்பு போராட்டம்

நிகழ்வுகள்


ஆட்குறைப்பை எதிர்த்து… 
ஆற்றல் மிகு ஆர்ப்பாட்டம்


02/03/2018  அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள
BSNL தமிழக முதன்மைப் பொதுமேலாளர் அலுவலகத்தில்
ஆட்குறைப்பை எதிர்த்து… ஆற்றல் மிகு ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற சங்கமாம் NFTCL இயக்கத்தால்
உணர்வோடு… உரமோடு… உரிமை முழக்கத்தோடு… நடத்தப்பட்டது.
மாநிலத்தலைவர் தோழர்.பாபு, 
செயல்தலைவர் தோழர்.மாரி ஆகியோர் தலைமை வகித்தனர். 
மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் துவக்கவுரையாற்றினார்.

அகில இந்திய துணைப்பொதுச்செயலர் 
தோழர்.சுப்பராயன் சிறப்புரையாற்றினார்.
அகில இந்தியப் பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள்
உரிமைமிகு….உணர்ச்சிமிகு…  எழுச்சிமிகு… உரையாற்றினார்.
தலைமை அலுவலகத்திலே… தாராளமாய் எடுபிடிகள்……
அன்று நமக்கோ ஏராளமாய் கெடுபிடிகள்…
காலையிலேயே வாயில் கதவுகள் மூடப்பட்டன…
காக்கிச்சட்டைகள் வழியெங்கும் தென்பட்டன…
தடைகளைத் தாண்டி… தன்மான உணர்வோடு தோழர்கள்
உணர்ச்சிக்கனலோடு… உரிமைக்குரலோடு…
தலைமை அலுவலகத்தில் சாரைசாரையாய்க் குவிந்தனர்…
சென்னைத்தொலைபேசித் தோழர்கள்…
தமிழகம் முழுவதுமிருந்து தோழர்கள் என…
ஒப்பந்த ஊழியர் படை பெருத்தது…
CGM அலுவலகம் சிறுத்தது….
  
அடிமட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுப்பவர்கள்…
ஆகப்பெரும் அதிகாரிகளாக இருக்கலாம்…
ஆளவட்டம் போடும் தலைவர்களாக இருக்கலாம்…
அவையாவும் வஞ்சிக்கப்பட்ட வயிறுகளின்
பற்றியெரியும் பெருநெருப்பிலே
பொசுங்கிடும்…. புகைந்திடும்…
இதுவே வரலாறு….
 ஒடுக்கப்பட்ட ஊழியர்கள்…
சுரண்டப்படும் ஒப்பந்த ஊழியர்கள்…
வாழ்வு காத்திட வரலாறு படைப்பார்கள்…
02/03/2018 நிகழ்வு தமிழக வரலாற்றில் ஒரு தொடக்கமே…



சம்பளத்தாமதம் என்னும்...
மாதாந்திர வேதனையைத் தீர்த்திட…
ஆட்குறைப்பு என்னும் அநியாயம் தடுத்திட…

தலைநகர் சென்னையில்…
தமிழ்மாநில நிர்வாக அலுவகம் முன்பாக…
மார்ச் 2... 
மாநிலம் முழுவதுமிருந்து...
அணிதிரள்வோம்…. ஆர்ப்பரிப்போம்…
வாரீர்… தோழர்களே…