வாழ்த்துக்கள்
அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா-தமிழ் மாநிலமே திரண்ட விழா
இன்று
(22-08-2017) புதுவை தோழர் அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா.தமிழகம்
முழுவதும் இருந்து 400- க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும்,சிபிஐ
மாநிலச்செயலருமான தோழர் ஆ.ர்.விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் தோழர்
நாரா.கலைநாதன்,NFTCL பொதுச்செயலர் தோழர் மதி என்று பல தலைவர்கள்
வாழ்த்தினர்.சம்மேளத்தின் சார்பில் நானும் ராஜசேகரனும் இளங்கோவனும்
வாழ்த்தினோம்.தோழர் மாலி விழாவை
வழி நடத்தினார்.மாவட்டச்செயலர்கள்
பாலகண்ணன்,கணேசன்,பழநிவேல்,பழனியப்பன்,மாரி,மாநிலச் சங்க நிர்வாகிகள்
சண்முகம்,சுந்தரமூர்த்தி, பரிமளம்,புண்ணியக்கோடி,ஆறுமுகம் தோழர்ஆனந்தன்
தலைமையில் NFTCL நிர்வாகிகள் என அனைத்து தரப்பும் வாழ்த்தின.தோழர் தங்கமணி
தலைமையில் விழாக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.