Thursday 2 February 2017

மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றம்! வரி விதிப்பதற்கான வருமான வரம்பை உயர்த்தாத அருண் ஜேட்லியைக் கண்டிக்கிறோம்!

ரூ ஐந்து லட்சம் அளவிலான வருமானம் வரை வருமானவரி விதிக்க மாட்டோம் என்றதுபாஜகவின் தேர்தல் அறிக்கை. ஆனால் இன்று
தாக்கல் செய்யப்பட 2016-17 நிதிநிலை அறிக்கையில் வருமான வரம்பு உயர்த்தப் படவில்லை!
தற்போதுள்ள ரூ 2.5 லட்சம் வரை வரி இல்லை என்ற நிலையே நீடிக்கிறது. விலைவாசி உயர்வால் ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் என்பது, வரி விதிக்கத் தக்க வருமானமே இல்லை. எனவே வாக்களித்தபடி,ரூ 5 லட்சம் வரை வரி இல்லை என்று அருண் ஜேட்லி 
அவர்கள் அறிவித்து இருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, ரூ 2.5 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரையிலான வருமானத்தின் மீதான தற்போதைய வரியான 10 சதம் என்பதை 5 சதமாகக்குறைத்து இருக்கிறார்.

இது போதுமானதல்ல. குறைந்தபட்சம் ரூ 3 லட்சம் வரை வரி இல்லை என்று கூட அவர் அறிவிக்கவில்லை.இது நியாயமற்றது.மாதச் சம்பளம் ரூ 25,000 பெறும் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ 3 லட்சம் ஆகி விடுகிறது. பழைய காலத்தைப் போன்று எவ்விதமான STANDARD DEDUCTION
எனப்படும் கழிவும் கிடையாது. இதன் காரணமாக, மேற்கூறிய மாதச் சம்பளக்காரர், ரூ 50,000க்கு ரூ 2500 வரி கட்ட வேண்டும். இது நியாயமா?
இந்த அநியாய வரியை ரத்து செய்ய மனமில்லாத நிதியமைச்சர் மக்கள் விரோத நிதியமைச்சரே.அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவை அருண் ஜேட்லிக்கு நிர்ப்பந்தம் அளிக்க வேண்டும்.
வாக்களித்தபடி, ரூ 5 லட்சம் வரை வரி இல்லை என்று அருண் ஜேட்லி அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேறுவதற்குள் இந்தத் திருத்தத்தை நிதியமைச்சர் அறிவிக்கலாம். அறிவிக்க முடியும்!
அதற்காகப் போராடுவோம்!
No automatic alt text available.Image may contain: 1 person, sunglasses and close-up