Sunday, 28 June 2015
Friday, 26 June 2015
TTA கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை
01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்கு
10/05/2010 முதல் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கிட
BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது.
01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த
TTA தோழர்களுக்கு30 சத ஊதிய நிர்ணயம் செய்யப்படாததால்
பெரும் ஊதிய இழப்பு தொடர்ந்தது.
நமது NFTE மத்திய சங்கமும்
SNATTA சங்கமும் இணைந்து மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சினையை தீர்க்கக்கோரி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
தற்போது இந்த பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படா விட்டாலும்
5க்கு 2 பழுதில்லை என்ற கணக்கில் தீர்வை எட்டியுள்ளது.
மேற்கண்ட முடிவு TTA தவிர
வேறு கேடர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பல ஆயிரம் தோழர்களுக்கு ஆண்டு உயர்வு தேக்க நிலை தொடருகிறது..
சேவையில் மூத்தோர் இளையோர் சம்பள முரண்பாடு தொடருகிறது..
நாலு கட்டப்பதவி உயர்வால் ஏற்பட்ட குழப்பங்கள் தொடருகிறது..
ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் செய்வதில் தாமதம் தொடருகிறது..
பதவிப்பெயர் மாற்றம் செய்வதில் அலட்சியம் தொடருகிறது..
இப்படியாக சலிப்புக்கள் தொடர்ந்தாலும்
ஆறுதல் பரிசாக TTA தோழர்களின் பிரச்சினை
தன்னால் முடிந்தவரை தீர்வை எட்டியுள்ளது.
Wednesday, 24 June 2015
Sunday, 21 June 2015
இன்று உலக யோகா தினம்...
நானம்மா
பாட்டிக்கு வயது 93. 'உருவத்தைப் பார்த்து வயதைக் கணக்கிடாதே’ என்பது
நானம்மா பாட்டிக்கு சரியாகப் பொருந்தும். ஆறு அடியை எட்டும் உயரத்தில்
ஆரோக்கியமாக வலம் வருகிறார். 50 வகையான யோகாசனங்களை அசாத்தியமாகச் செய்து
நம்மை விழி விரியவைக்கிறார்.

நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும்
வலுவாக வைத்துள்ள நானம்மாளை சந்தித்தோம். கோவை கணபதியில் வீடு. தேன் கலந்த
தண்ணீர் கொடுத்து உபசரித்தார். தாகத்தில் நாம் செம்பை வாயில் கவிழ்க்க,
'மளமளன்னு குடிக்காத கண்ணு! பொறுமையா சுவைச்சுக் குடி' என்று சொன்ன
வார்த்தைகளிலேயே, அவர் வாழ்க்கையை எவ்வளவு ரசித்து வாழ்கிறார் என்பது
புரிந்தது.
Friday, 19 June 2015
வரலாற்றில் இன்று ஜூன் 20,
1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.

Wednesday, 17 June 2015
ஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .
இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள் வரிசையில், கலெக்டர் ஆஷ் கொலைக்கு காரணமான 'வீரன் வாஞ்சிநாத'னுக்கும் முக்கிய இடம் உண்டு.
நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.
வாஞ்சிநாதன் மிகவும் மதித்துப் போற்றிய வ.உ. சிதம்பரனார் மற்றும்., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.
இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.
யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.நினைவை போற்றுவோம்.
Subscribe to:
Posts (Atom)