Monday, 25 May 2015

ஒப்பந்த ஊழியர் சம்பளம்



நமது போராட்ட  கோரிக்கைகள் மீது  04/06/2015 ஒப்பந்தகாரர்கள், நிர்வாகம், NFTE-BSNL/BSNLEU சங்கங்களின் சார்பாக மாவட்டச் செயலர்கள் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்.


















TTA தேர்விற்கான பாடக் குறிப்புக்கள் . . .




அருமைத் தோழர்களே ! நடக்க விருக்கும் TTA தேர்விற்கான பாடக் குறிப்புக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது  இதனை தோழர்கள் பயன்படுத்தி  தேர்வில் வெற்றி பெற நமது NFTE தஞ்சை   மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது  . . . பாடகுறிப்புகளுக்கு  இங்கே கிளிக் செய்யவும்.

Thursday, 21 May 2015


 

தஞ்சை அரசு பள்ளி மாணவி வைஷ்ணவி 499மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்

இன்று வெளியாகும் 10TH தேர்வில் வெற்றிபெறும் தோழர்களின் குழந்தைகள் அனைவரையும் தஞ்சை  மாவட்டச்சங்கம் வாழ்த்துகிறது.

Wednesday, 20 May 2015

ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டம்






ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கால தாமதமாக சம்பளம் கொடுப்பதை கண்டித்து தஞ்சையில் ஒப்பந்த தொழிலாளர்கள்சங்கம் TMTCLU/TNTCWU -மற்றும்
NFTE-BSNL/BSNLEU
சங்கங்களின் சார்பாக  அறைகூவல் விட்டுள்ளது..

உதவிப்பொதுமேலாளர் அவர்களை கண்டித்து

ஒப்பந்தகாரர்களை எதிர்த்து

25-5-2015 நிரந்தர ஊழியர்கள்.... ஒப்பந்த ஊழியர்கள்… 
கண்டன முழக்க 
ஆர்ப்பாட்டம்.

                 விதியே என நொந்து கிடக்க மாட்டோம்..
நிறுவனம் காக்க.. நமது உரிமைகள் காக்க 
வீதியில் இறங்கிப் போராடுவோம்...
வீறு கொண்டு வாரீர்.. தோழர்களே...

Saturday, 16 May 2015

மே - 17
தோழர்.ஜெகன் பிறந்த நாள் 
NFTE  இளைஞர் தினம் 
அன்பால் 
பண்பால் 
இளைஞர்களை 
தன்பால் ஈர்த்த 
இளைஞர்களின் 
வழிகாட்டி
மாசிலா மனித நேயம்...
தோழர்.ஜெகன் 
புகழ் பாடுவோம்..
அனைவருக்கும் 
NFTE 
இளைஞர் தின வாழ்த்துக்கள்...