Tuesday, 30 August 2016
Monday, 29 August 2016
தேர்வுகளும்... குழப்பங்களும்
28/08/2016 அன்று நடக்கவிருந்த JTO இலாக்காத்தேர்வும்..
JAO 10 சதக் காலியிடங்களுக்கான தேர்வும்
24/09/2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28/08/2016 தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
13/08/2016 என அறிவிக்கப்பட்டது. அப்போதே
தேர்வு தள்ளிப்போகலாம் என்ற செய்தி உலவியது. ஆனால் சங்கங்கள் தேர்வைத்
தள்ளி வைக்க கூடாதென்று நிர்வாகத்திடம் வாதிட்டன. தோழர்களும் அதை நம்பி
விடுப்பு எடுத்து தேர்வுக்குத் தயாராகி... பல தோழர்கள் சென்னைக்கும் சென்று
விட்டனர். தேர்வுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது தேர்வைத் தள்ளி
வைப்பது தோழர்களின் ஆர்வத்தைக் கெடுப்பது போலாகிவிட்டது.
ஒரு தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியைத் தள்ளி வைக்கும் போதே
தேர்வு உரிய நேரத்தில்
நடக்குமா? இல்லையா ? என்பதை வரும் காலத்திலாவது நிர்வாகம் சரி வர சொல்ல
வேண்டும். இப்போதெல்லாம் நிர்வாகம் என்ன நினைக்கிறதோ... அது மட்டுமே
நடக்கிறது...
தோழர்கள்... மனம் தளராமல் தேர்விற்கு மீண்டும் தயாராகவும்...
வாழ்த்துக்கள்
31.08.16 இன்று நடக்கஇருப்பவை பணிநிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்கள்
1.U.JOHNPETER
TT THANJAVUR
2.T.RAJENDRAN TT THANJAVUR
3.R.VISWALINGAM TT PATTUKOTTAI
4.K.PALANIAPPAN TT PATTUKOTTAI
அவர்களின் பணி நிறைவுக்காலம் இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட nfte குடும்பத்தின் சார்பாக
வாழ்த்துகிறோம்.
மாவட்டச்சங்கம்
Friday, 26 August 2016
போனஸ் கமிட்டி கூட்டம் !
- 24-8-16 அன்று போனஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
- புதிய PLI திட்டத்தில்... DOT-BSNL MOU உடன்பாட்டின் அடிப்படையில், வருவாய் இலக்குக்கு (Revenue Target) மேல், கூடுதல் வருவாய் ஒவ்வொரு கோடி ரூபாய்க்கு போனஸ் (PLI) ஒரு ரூபாய் வழங்க நிர்வாகம் முன் வந்தது
- சங்க பிரதிநிதிகள் இதை ஏற்காமல் 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கு அட்ஹாக் போனஸ் வழங்க வலியுறுத்தினர் .
2014-15 ஆண்டுக்கு ரூ.1100/- வழங்க நிர்வாகம் முன்வந்தது.
இந்த தொகையையும் சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை.
அதிகப்படுத்த வலியுறுத்தினர்.
2015-16 நிதியாண்டுக்கு நிதிநிலை அறிக்கை தணிக்கை
செய்த பிறகு விவாதிப்பதாக தெரிவித்தது.
அடுத்த கூட்டம் 5-9-16 அன்று நடைபெறும் என்று முடிவு
எடுக்கப்பட்டது.
Monday, 22 August 2016
Subscribe to:
Posts (Atom)