Thursday, 31 March 2016

போனஸ் குழுக்கூட்டம் 
30/03/2016 அன்று டெல்லியில் 
போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது. 
நிர்வாகத்தரப்பில் PGM(SR) GM(RESTR) மற்றும் GM(PER) 
ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஊழியர் தரப்பு சார்பாக..
நமது அகில இந்தியத்தலைவரும், 
தேசியக்குழு ஊழியர் தரப்புத்தலைவருமான 
தோழர்.இஸ்லாம் அகமது கலந்து கொண்டார். 

BSNLEU  தரப்பு உறுப்பினரான 
தோழர்.அபிமன்யு கலந்து கொள்ளவில்லை. 
பாவம்... அவருக்கு போனசை விட 
பல முக்கிய வேலைகள் இருந்திருக்கலாம். 

நிர்வாகத்தரப்பில் குறைவான தொகை போனசாக முன் வைக்கப்பட்டது. போனஸ் தொகையின் அளவு நமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் 
நமது உரிமையான போனசை 
நாம் போராடிப்பெற்ற போனசை 
நாம் ஆண்டாண்டு காலம் பெற்ற போனசை..
நிர்வாகம் மறுக்கவே இயலாது என்றும்...
ஊழியர்களுக்கு கொடுத்தே தீர வேண்டும் என்றும்..
உணர்வோடு.. உறுதியோடு... 
தனது  வாதத்தை தோழர்.இஸ்லாம் முன் வைத்தார். 

போனஸ் குழு தனது பரிந்துரையை 
நிர்வாகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கும். 
அதன் பின் உரிய முடிவெடுக்கப்படும்.

போனஸ் நமது உரிமை...
போராடி... வாதாடிப் பெறுவது நமது கடமை...
ஒதுங்கி நின்று... ஓரங்கட்டுவது மடமை...

Tuesday, 29 March 2016

NFTE 
               தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 

   தஞ்சைமாவட்டம் 

தேர்தல் சிறப்பு 

கிளைச்செயலர்கள் கூட்டம்
 
                  
 
 
 
        



 

வாழ்த்துக்கள்.



Monday, 21 March 2016


                         NFTE 
               தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 

   தஞ்சைமாவட்டம் 

தேர்தல் சிறப்பு 

கிளைச்செயலர்கள் கூட்டம் 


29/03/2016 - செவ்வாய் கிழமை - காலை 10 மணி 

NFTE மாவட்ட சங்க அலுவலகம் -தஞ்சை.

                                          - : தலைமை :- 

தோழர். S. பிரின்ஸ் மாவட்டத்தலைவர்.

                                        தோழர்களே... வருக..

   நமது சின்னம் 

                                     இணைந்த கரங்கள் 
                        இணைந்த கரங்களுக்கு வலு சேர்க்கும் 
                இனிய கரங்களை..(.tepu,pewa, sewa)
             வாழ்த்தி வரவேற்கிறோம்...

தோழர்T. பன்னீர்செல்வம்

                                      மாவட்டச் செயலர்

Saturday, 19 March 2016

Wednesday, 16 March 2016


தமிழகத்தில் NFTE-BSNLன் மகத்தான வெற்றியை
    பறைசாற்றிய   தேர்தல் பிரச்சார    துவக்க விழா !   











Monday, 14 March 2016

200-ல் 50!

நமது Service SIM -ல் நமக்கு வழங்கப்பட்டுள்ள 200 இலவச அழைப்புகளில், இனி ரூ. 50 க்கு தனியார் தொலைபேசிக்கும் பேசலாம். அனைத்து சங்க போராட்ட கோரிக்கைகளில் ஒன்று இன்று நிறைவேறியுள்ளது. தொடர்ச்சியாக இப்பிரச்சனையில் அழுத்தம் கொடுத்து நிறைவேற்றிய நமது அகிலஇந்திய தலைமைக்கு நன்றி!

 

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

 

அனைத்து மாணவ, மாணவிகளும் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற NFTE தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

Friday, 11 March 2016


7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்
பிரச்சார துவக்க திரள் கூட்டதிற்கான - அழைப்பிதழ்

Saturday, 5 March 2016

7 வதுஉறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் 
கலந்து கொள்ளும் தகுதியுள்ள 20 சங்கங்களை 
நிர்வாகம் வெளியிட்டுள்ளது 
1
AIBCTES
2
BTU
3
BTEU
4
BSNLATM
5
BSNLDEU
6
BSNLEAU
7
BSNLEC
8
BSNLES
9
BSNLEU
10
BSNLMS
11
BSNLNTSU
12
BSNLPEWA
13
BSNLSU
14
BSNLWRU
15
FNTOBEA
16
NFTBE
17
NFTEBSNL

18
FNTO
19
TEPU
20
TEUBSNL

Thursday, 3 March 2016

அய்யம்பேட்டைகிளை மாநாடு,



இன்று (03.03.2016) கிளைத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

      ஆண்டறிக்கையை சமர்பித்தார் .வரவு ,செலவு 

கணக்கு மற்றும் ஆண்டறிக்கை விவாதித்து முழு மனதோடு ஏற்றுகொள்ளப்பட்டது . இக்கூட்டத்தில்  தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
             தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
        தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக 

பொறுப்பாளர்களாகதேர்வு செய்யப்பட்டனர் .

 தலைவர் .தோழர்   g. ராமலிங்கம்  

செயலர் .தோழர் s. ஞாசுடர்

பொருளர் .தோழர் m. உத்திராபதி

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். 

சிறந்தமுறையில் ஏற்பாடு செய்து நடத்திட்ட கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றி ...

பாபநாசம் கிளை பொதுக்குழுக்கூட்டம்


இன்று (03.03.2016) கிளைத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
          தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்

கலந்துகொண்டு ஏழாவது சரிபார்ப்பு தேர்தலில் நமது சங்கம் முதன்மை சங்கமாக வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும்,  விளக்கியும், மாநிலமாநாடு பற்றியும் விளக்கிப்பேசினார்.,. கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சுநிறை நன்றி ...