Wednesday, 30 September 2015

அக்டோபர்-1 BSNL உருவான நாள்


                               

    இதோ...! ஆண்டுகள் 15 ஆகி...
எத்தனையோ... தடைகளுக்கிடையே...
நம்மை...! காத்திட...!     
BSNL... ஆலமரம் போல் விரிந்து நிற்கிறது...
அதன் நிழலில் சுகம் தேடிய நாம்...
அதன் வேரை காத்திட... விழுதுகளாய் நின்று தாங்கி நிற்போம்...
நம் வாழ்வை மலரச்செய்த...
மாமணியைக் கண்மணி போல்... காத்து... நிற்போம்...
வாழ்க BSNL... வளர்க BSNL...


                                   
29-09-2015 அன்று நடைபெற்ற... 
புதுவை மாவட்ட மாநாட்டில்...
புதிய நிர்வாகிகள்
                                  மாவட்ட தலைவர்: தோழர். தண்டபாணி

                                மாவட்ட செயலர்: தோழர். செல்வரங்கன் 

                                மாவட்ட பொருளர்: தோழர். தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான...
புதிய நிர்வாகிகள் சிறப்புடன்... 
செயல்பட... நமது வாழ்த்துக்கள்...

IDA உயர்வு

அக்டோபர்  2015
IDA  உயர்வு 
01/10/2015 முதல் 
5.3 சத IDA  
உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள்  
107.9 ஆகும்.

Wednesday, 23 September 2015

குடந்தை 3 வது மாவட்ட மாநாடு





 குடந்தை மாவட்ட மாநாடு புதிய நிர்வாகிகள் 

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
மாவட்ட தலைவர்  தோழர் . C.கணேசன் 

மாவட்டச் செயலர் தோழர்.  M .விஜய்  ஆரோக்கியராஜ் 

மாவட்ட பொருளர் தோழர் . P .பாலமுருகன்  

 புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.


பக்ரீத்

Monday, 21 September 2015

பக்ரீத் பண்டிகை தேதி 24.09.15-க்கு மாற்றப்பட்டுள்ளது.


அருமைத்தோழர்களே!                      
   நமதுதமிழ்மாநிலத்தில் ஏற்கனவே,பக்ரீத்பண்டிகை25.09.15என      அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது பக்ரீத்பண்டிகை     
  தேதி 24.09.15-க்கு மாற்றப்பட்டுள்ளது. click here

Sunday, 20 September 2015

குடந்தைமாவட்ட மாநாடு






குடந்தைமாவட்ட மாநாடு வெற்றிபெற

தஞ்சைமாவட்ட சங்கத்தின் சார்பான வாழ்த்துக்கள்!



மத்திய அரசு ஊழியர்கள் இயக்க வரலாற்றில் எவராலும் மறக்க இயலாத நாள். 

மத்திய அரசு 3 ஆம் ஊதிய குழுவை அமைத்த போது அதன்  செயல்பாட்டு 
வரைமுறை குறிப்பில் " தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியத்தை " 
சேர்க்க மறுத்தது. ஆகவே, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், பஞ்சபடியை அடிப்படைசம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி வழங்குவதற்கான விதிமுறைகளை முதலிய  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்றது. 

அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. அரசின் திமிர்த்தனமும், 
ஊழியர்களை துச்சமென மதிக்கும் போக்கும் ஊழியர்களை  மேலும் கொதிப்படைய செய்தது.

வேலை நிறுத்தம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். 10,000 மேற்பட்டோர் suspend செய்யப்பட்டனர். 3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். Casual .ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சேவை முறிவு, தொலைதூர இட மாற்றம் , பதவி இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.அன்றைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாத்பாய் அவர்களின் கண்டன உரை நாடாளுமன்றத்தை உலுக்கியது.