
Sunday, 31 August 2014
செய்திகள்
BSNL உதயம் ஆன 01/10/2000 முதல் 30/06/2001 வரை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு கடைசி பத்து மாதம் முழுமையாக IDA சம்பளத்தில் இல்லாததால் ஓய்வூதியத்தில் குறைவு ஏற்பட்டது. இதில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை 01/09/2014க்குள் அனுப்புமாறு BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
==============================================================
DELOITTE குழு அறிக்கையின் மீதான கருத்துக்களை 10/09/2014க்குள் தலைமையகத்திற்கு அனுப்புமாறு மாநில CGMகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
==============================================================
NFTE அனைத்து மாநிலச்செயலர்கள் கூட்டம்
06/09/2014 அன்று டெல்லியில் நடைபெறுகின்றது.
==============================================================
EPF வட்டி விகிதம் 8.75 சத அடிப்படையிலேயே தொடருகின்றது.
மிக நீண்ட போராட்டத்திற்குப்பின்... EPF திட்டத்தில் உறுப்பினர்களாக இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1000/= என அரசு உத்திரவிட்டுள்ளது. மாத ஊதிய வரம்புத்தகுதி 6500ல் இருந்து 15000/= எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
==============================================================
NFTE உறுப்பினர் சந்தா மாதம் ரூ.25/= என உயர்த்துவதற்கும்
அகில இந்திய மாநாடு, மாநில மாநாடு 3 வருடத்திற்கொரு முறையும்
மாவட்ட மாநாடு 2 வருடத்திற்கொரு முறை நடத்துவதற்கும்
திருத்தங்கள் ஜபல்பூர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
==============================================================
ஜூலை மாதத்தில் விலைவாசிப்புள்ளி 6 சதம் உயர்ந்துள்ளது. எனவே அக்டோபர் மாத IDA குறைந்தபட்சம் 6.6 சதம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு 2009 ஜூலையில்
7 சதம் IDA உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Saturday, 30 August 2014
செப்டம்பர் - 2 - ஈரோடு
பணிக்குழு கருத்தரங்கம்
SEMINAR ON WORKS COMMITTEE
பகுத்தறிவுக்குப் பாதை தந்த ஈரோட்டில்...
பணிக்குழு கருத்தரங்கம்...
பணிக்குழு உறுப்பினர்கள்..
மாநிலச்சங்க நிர்வாகிகள்..
மாவட்டச்செயலர்கள்
பங்கேற்பு...
தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கருத்துரை...
பணிக்குழு கருத்தரங்கம்...
பணிக்குழு உறுப்பினர்கள்..
மாநிலச்சங்க நிர்வாகிகள்..
மாவட்டச்செயலர்கள்
பங்கேற்பு...
தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கருத்துரை...
செழுமைப்படுத்திட...
பணிக்குழு பணிகளை
செம்மைப்படுத்திடுவோம்....
வாரீர்... தோழர்களே...
Friday, 29 August 2014
Thursday, 28 August 2014
Wednesday, 27 August 2014
TTA ஆளெடுப்பு விதிகள் 2014
TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள்
BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி
TTA பதவிகள் 50 சதம் இலாக்காத்தேர்வு மூலமும்
50 சதம் நேரடிப்போட்டி மூலமும் நிரப்பப்படும்.
இலாக்காத்தேர்வு
வயது வரம்பு 55 வயதிற்கு கீழ்கல்வித்தகுதி +2 தேர்ச்சி/2 வருட ITI /3 வருட DIPLOMA தேர்ச்சி
சேவைத்தகுதி : 9020-17430 சம்பள விகிதத்தில் 5 வருட சேவைக்காலம்
Tuesday, 26 August 2014
மதுரை அநீதி களைய
மாநிலச்செயலர் அறப்போர்
கால் சிலம்பு கழற்றி...
கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
காலில் விதிகளை போட்டு மிதிக்கும்
கடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக்
கண்டித்து மாநிலச்செயலர்
தோழர்.பட்டாபி
28/08/2014 முதல்
காலவரையற்ற
உண்ணாவிரதம்
தோழர்களே...
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..
28-08-14 முதல் நடக்கும் உண்ணாவிரதப்
28-08-14 முதல் நடக்கும் உண்ணாவிரதப்
போராட்டம் வெல்ல வாழ்த்துகிறோம் .
>ÞçÄ \Vk⦠ĺïD
Monday, 25 August 2014
செய்தி . . . துளிகள் . . .
செய்தி . . . துளிகள்
. . .
·
டிஜிட்டல் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக, தொலைத் தொடர்பு, தகவல்தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.69,500 கோடியை மத்திய அரசு முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளது.நாட் டிலுள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளையும்டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் இணைக்க
பிராட்பேண்ட், மொபைல்போன் வசதிநெட்வர்க் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 32,000கோடி ஒதுக்கியுள்ளது.
·
இதுவரை மொபைல் போன் தொடர்பு வசதி இல்லாத 42,300 கிராமங்களுக்குமொபைல்போன் கட்டமைப்பு வசதியை அளிக்க ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் வசதி அமைக்க ரூ.4,750 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தேசிய தகவல் கட்டமைப்பைஉருவாக்கவும் ரூ.
15,686 கோடி ஒதுக்கப்பட உள்ளது.
201112ம் ஆண்டிற்கான வருமானத்தை BSNL நிறுவனம் குறைத்துக் காட்டியதாக கூறிவருமான வரித்துறை 6234 கோடிக்கு வரிகேட்பு அறிவிப்பு செய்துள்ளது. 2011-12ல் BSNL 8850 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி நமது இலாக்காஅமைச்சர் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
·
ஓய்வு பெற்ற தோழர்களுக்கான 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக செலவின இலாக்கா DEPARTMENT 0F EXPENDITURE எழுப்பிய சந்தேகங்களுக்கு 40 நாள் கழித்து DOT தனதுபதிலை அனுப்பியுள்ளது. ஓய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் பல தோழர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை வழக்குகள் பல காலமாகத் தேங்கிக் கிடக்கின்றனஇத்தகைய வழக்குகளைஉடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திர விட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)