Thursday, 19 November 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயர்வு: சம்பள கமிஷன் பரிந்துரை,



புதுடெல்லி,



மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.



இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கையை இன்று ஊதிய குழுவின் தலைவர் ஏகே மாத்தூர், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயவு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,  வருடத்திற்கு 3 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் அளிக்கவும்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 



மேலும், வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 52 விதமான படிகளை ரத்து செய்யவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Monday, 16 November 2015

தஞ்சை மாவட்டசங்க வேண்டுகோள்..



மனித நேயத்துடன், துயிர் துடைக்க உதவிட தஞ்சை மாவட்டசங்க வேண்டுகோள்..

நமதுNFTEஅனைத்துகிளை&மாவட்டசங்க நிர்வாகிகள் உடனடி கவனத்திற்கு :- 

அருமைத் தோழர்களே ! தோழியர்களே !! சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள் கிட்டத்தட்ட . 40க்கும்  மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .நமது NFTE தஞ்சை மாவட்ட சங்க  அனைத்து ஊழியர்கள் உதவி செய்திட வேண்டுமாய் மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .

Saturday, 14 November 2015

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 123-வது பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Wednesday, 11 November 2015

கன மழையால் வெள்ளக்காடானது சென்னை மாநகரம்

 


சென்னை: சென்னையில் பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகள், சுரங்கப்பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். வாகனங்கள் மெதுவாக செல்வதால் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



இயற்கை சீற்றத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர் மாவட்டம்...

Tuesday, 10 November 2015

ணி சிறக்க...வாழ்த்துக்கள்
 
மாநிலச்செயலர்  

தோழர்.பட்டாபி அவர்கள் 
விடுப்பில் சென்றுள்ளதால் 
மூத்த மாநில உதவிச்செயலர் 

தோழர்.சென்னக்கேசவன்...அவர்கள்


 பொறுப்பு மாநிலச்செயலராகச் 
செயல்படுகிறார்.
அவரது பணி சிறக்க  நல்வாழ்த்துக்கள்...

அலைபேசி எண் : 9486103979