Wednesday, 11 November 2015
Monday, 9 November 2015
Sunday, 8 November 2015
தீர்மானங்கள்...
போனஸ்
போனஸ்
வழங்குவதற்கான வரையறைகளை போனஸ் குழு இறுதி செய்யாத நிலையில்..
தீபாவளிக்குள் தற்காலிக போனஸ் வழங்கிடக்கோரி அகில இந்தியத்தலைவர்களும்..
மாநில மட்டத்தலைவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு மத்திய
செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
வைப்புநிதி - GPF
வைப்புநிதி
பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களை வருத்தத்துடன் செயற்குழு உற்று
நோக்குகிறது. வைப்பு நிதிக்கான நிதியை BSNLக்கு உடனுக்குடன் DOT அனுப்ப
வேண்டும் எனவும்.. தற்போது நிலவும் தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL நிர்வாகம்
முயல வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
78.2சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி
12/06/2012
வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல் HRA வாடகைப்படி 78.2 சத
IDA சம்பள அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல்
நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNL
நிர்வாகம் உடனடியாக 78.2 சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி
வழங்கிட வேண்டும்.
நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள்.
BSNLலில் நிரந்தரம் பெற்ற
ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012
வேலை நிறுத்தத்தின் போது உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் ஆண்டுகள் 3
கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. எனவே உடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன
ஊழியர்களுக்கு 12 சத பங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை
அறிவிக்க வேண்டும்.
ஓய்வூதியப் பங்களிப்பு
BSNL உருவாக்கத்தின் போது
ஊழியர்களுக்கான ஒய்வூதிய நிதியை அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது.
ஆனால் 15/06/2006 அன்று அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும் என்றும்..
40 சத நிதிச்சுமை BSNL நிர்வாகத்தால் ஏற்கப்பட வேண்டும் எனவும் உத்திரவு
இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர் விரோத உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட
வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட
மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
DELOITTE குழு அறிக்கை
ஒரு லட்சம்
ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஊழியர் விரோத DELOITTE
குழு அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD
BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சி கைவிடப்பட
வேண்டும். BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான இத்தகைய மோசமான முடிவுகளை
எதிர்த்து போராட்டக்களம் காண மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
செல் கோபுரம் தனி நிறுவனம்
செல்
கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும்
அரசின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் ஏற்படும்
செலவினங்கள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை.
மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஊழியர் தரப்பில் இருந்து யாரும்
நியமிக்கப்படவில்லை. எனவே தனி செல் கோபுர நிறுவன உருவாக்கத்தால் உருவாகும்
தீய விளைவுகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழு வேண்டுகோள்
விடுக்கிறது.
மாற்றல் கொள்கை
மாற்றல் கொள்கையில்
கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள் என்பது அதிகமான காலமாகும். எனவே 3
ஆண்டுகளுக்கு முன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு உரிய
திருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு வரப்பட வேண்டும்.
Friday, 6 November 2015
சொந்த வீடு, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு
புதுடெல்லி:
சொந்தமாக வீடு, கார் மற்றும் இருசக்கரம் வைத்திருப்பவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்க வேண்டாம் என்று முந்தைய காங்கிரஸ் அரசு முன் வைத்த திட்டத்தை அப்படியே அமல் படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் தற்போது பயனாளர்கள் வங்கி கணக்கில் வைக்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் அளித்து வரும் நிலையில் வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதை ஏற்று இதுவரை 42 லட்சம் பேர் சிலிண்டர் மானியத்தை விட்டு கொடுத்தள்ளனர். இந்த நிலையில் சொந்த வீடு, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்த பொருளாதார கருத்தரங்கில் பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை சூசகமாக வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!
சென்னை: தமிழகத்தை
சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக
இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.
இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.
இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல்
மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற
திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க
வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம்
அளிக்கும் வகையில் இருப்பார்.
எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல்
திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார். இதற்கு முன் இந்திய அளவில் 2
திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)