OUR UNION LINKS

forms

Friday, 31 August 2018

S.பிரின்ஸ் அவர்களுக்கு 29.08.2018 பணி நிறைவு பாராட்டு விழா


பணி நிறைவு பாராட்டு விழா
29-08-18 மாலைமணிக்கு தஞ்சை மாரீஸ் கார்னர் இணைப்பகத்தில் 
வெகு சிறப்பாக மாவட்டத் தலைவர் தோழர்.  T.  பன்னீர்செல்வம் 
தலைமையில் துவங்கியது. 100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் திரண்டிருந்தனர்

மாவட்டச் செயலர் தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள் வரவேற்று,
  மாவட்டச் சங்கம் சார்பில் சால்வையணிவித்து கவுரவித்தார்.
பொருளர் A.சேகர் சந்தனமாலை அணிவித்தார்.
மாவட்டச் சங்கம் சார்பில் நினைவுப் பரிசாக ஷீல்டு ஒன்றை தலைவர்கள் ஆர்.கே, சி.கே.எம், மற்றும் பொது மேலாளர் 
ஆகியோர் இணைந்து வழங்கினர்.

அனைத்துச் சங்க பொறுப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் 
வாழ்த்திப் பேசினர்.  நமது முன்னாள் சம்மேளனச் செயலர் 
தோழர். ஆர்.கே நிறைவுப் பேருரையாற்றினார்.
அகில இந்திய துணைத் தலைவர் தோழர். சி.கே.எம், மாநிலச் செயலர் K.நடராஜன், மாநிலத் தலைவர் காமராஜ், மாநிலப் பொருளர் எல்.சுப்பராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நமது முதன்மைப் பொது மேலாளர் திரு. சி.வி.வினோத் அவர்கள், AIBSNLEA முன்னாள் மாநிலச் செயலர் N.வீரபாண்டியன், இந்நாள் மாநிலச் செயலர் C.துரையரசன், ஓய்வூதியர் சங்கத்தின் 
தஞ்சை மாவட்ட பொதுச் செயலர் திரு. V.சாமிநாதன் 
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

தோழர். D.கலைச்செல்வன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.
இவர்களோடு AIBSNLEA மாவட்டச் செயலர் S.பிரபாகரன், FNTO மாவட்டச் செயலர் AMF.ஜெயசீலன்,SEWA மாவட்டச் செயலர் M.முருகையன், மாநில மகளிரணி தலைவர் A.லைலாபானு ஆகியோரும் வாழ்த்தினர்.

மேலும், DGM ராஜாராம், CAO உதயன், AGM குணசேகரன், AGM விவேகானந்தன், N.மேகநாதன், K.சின்னப்பா, F.ஆரோக்கியதாஸ், S.இளங்கோவன் ஆகியோரும் வாழ்த்தினர்.

விழாவுக்கு வந்திருந்த தோழர்கள், தோழியர்கள் அனைவரும் 
தோழர் S.பிரின்சுக்கு, சால்வை அணிவித்தும்
SDOP கிளை நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவித்தனர்.
இறுதியாக தோழர். S.பிரின்ஸ் அவர்கள், கடந்த கால பல்வேறு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவைகளை நினைவு கூர்ந்து 
சிறப்பானதொரு ஏற்புரையை  நிகழ்த்தினார்.

பின்னர் தோழர் P.ராஜாஜி நன்றி கூற விழா நிறைவடைந்தது.