OUR UNION LINKS

forms

Monday, 4 April 2016

ஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA 
விலைவாசிப்படி 01/04/2016 முதல்  
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது

UNSKILLED LABOUR                  

A  பிரிவு  நகரம்            B பிரிவு   நகரம்                                C பிரிவு  நகரம் 
ரூ.368/=           ரூ.307/=                           ரூ.246/- 
C பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.10/-ம் 
B பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.13/-ம் 
A  பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.13/-ம் 
விலைவாசிப்படி உயர்ந்துள்ளது.
வைப்பு நிதி - வானம் பார்த்த பூமி  


டெல்லியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படாத  காரணத்தால் 
சென்ற  மாதம் GPF பட்டுவாடா நடைபெறவில்லை. 

இதுநாள் வரை ஏதோ ஒரு தேதியில்
GPF  பட்டுவாடா நடைபெற்று வந்தது. 
இப்போது அதுவும் போய் விட்டது. 
BSNLEUவின் அரிய  சாதனைகளில் இதுவும் ஒன்று. 

இந்த மாதம் GPF விண்ணப்பிக்க விரும்பும் பாக்கியசாலிகள் தங்களது  மார்ச் மாத விண்ணப்பத்தை ERPயில் CANCEL  செய்ய வேண்டும். அதன் பின் புது விண்ணப்பம் செய்ய வேண்டும் என 
மாநில நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது .

தற்போது  ERPயில் சம்பளப்பட்டியல் கூட எடுக்க முடியவில்லை. 
ERP தோழர்களைத் தொடர்ந்து  சுற்றில் விடுகிறது. 
எனவே மார்ச் மாத GPF தொகை கணக்கில் சேர்ந்து விட்டதா 
என்பதை உறுதி செய்த பின் தோழர்கள் GPF விண்ணப்பிக்கவும். 

அது சரி...இந்த மாதமாவது GPF பட்டுவாடா நடக்குமா?
 என நீங்கள் கேட்பது நமது காதில் ஒலிக்காமல் இல்லை.  
வானிலை அறிக்கை இரமணனும் 
சென்ற மாதம் ஓய்வு பெற்று விட்ட நிலையில் 
நமக்கு வைப்புநிதி அறிக்கை யார்தான் தரமுடியும்...

நமது விவசாயிகள் வானம் பார்த்து 
எப்படி வாழ்கின்றார்கள் என்று 
நாம் விரைவில்  கற்றுத்தேற வேண்டும்.
அதுவே நமது பிரச்சினைக்குத் தீர்வாகும்...