OUR UNION LINKS

forms

Thursday, 30 April 2015

மே தினவாழ்த்துக்கள்....

வளைந்த முதுகு நிமிர்ந்திடு..  இணைந்த கரங்கள் உயர்த்திடு..
 
இயற்கை தந்தது இருபத்து நாலு  மணி நேரம் ..
இன்னுயிர் நீத்த தியாகிகள் தந்தது எட்டு மணிநேரம்..இன்றோ..
எட்டுமணி.. எத்தனையோ இடங்களில் எட்டாக்கனி..இங்கு..
சமவேலை என்பார்.. சம ஊதியம் என்பார்..
ஆனால்..சுமை வேலை சொல்வார் .. சுகமற்ற ஊதியம்  தருவார்..இப்படி...
கிட்டிய உரிமைகள் எட்டிப்போகும் இழிநிலை பாரீர்..
இனி...மோடிகள் ஆண்டாலும்.. லேடிகள்.. ஆண்டாலும் 
வாடி நிற்பது என்னவோ உழைப்பவனின் வயிறுதான்..
நமக்கும் கீழே வாடுபவர் கோடி...
அவர் வாட்டம் போக்கிட உயர்த்திடு NFTEசெங்கொடி...