பல மாவட்டங்களில் 3 மாத அளவில் இன்றளவும் சம்பளப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து மல்லி செக்யூரிட்டி ஒப்பந்ததாரர் மீது தொழிலாளர் நல ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம் அதன் முதற்கட்டமாக மல்லி ஒப்பந்ததாரர் நேரடியாக நம்மளோட பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று விரும்பியது விளைவாக இன்று பூக்கடையில் உள்ள நமது NFTE தொழிற்சங்க அலுவலகத்தில் நமது பொதுச் செயலாளர் தோழர் C.K.மதிவாணன் அவர்கள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரு மாதத்திற்குள் சரி செய்வதாக ஒப்புக் கொண்டு ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். சம்பளப் பட்டுவாடா பிரச்சனையில் தொடர்ச்சியாக நமது சங்கம் முன்கை எடுத்து வருகிறது இதற்கான தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும் ....
Wednesday, 26 September 2018
Wednesday, 19 September 2018
Friday, 31 August 2018
வாழ்த்துக்கள்
31.08.18
இன்று நடக்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
தோழர் N. ரவிச்சந்திரன் TT அவர்கள், பேராவூரணி
தோழர். S. பிரின்ஸ் OS (P) அவர்கள், தஞ்சாவூர்.
தோழர். B. வையாபுரி JE அவர்கள்,மன்னார்குடி.
தோழர். K. பன்னீர்செல்வம் அவர்கள்,பட்டுக்கோட்டை.
தோழர். A. செபாஸ்டின் TT அவர்கள்,பாபநாசம்.
அவர்களின் பணி நிறைவுக்காலம்
இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE & NFTCL குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...
S.பிரின்ஸ் அவர்களுக்கு 29.08.2018 பணி நிறைவு பாராட்டு விழா
பணி நிறைவு பாராட்டு விழா
29-08-18 மாலை 5 மணிக்கு தஞ்சை மாரீஸ் கார்னர் இணைப்பகத்தில்
வெகு சிறப்பாக மாவட்டத் தலைவர் தோழர். T. பன்னீர்செல்வம்
தலைமையில் துவங்கியது. 100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் திரண்டிருந்தனர்.
மாவட்டச் செயலர் தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள் வரவேற்று,
மாவட்டச் சங்கம் சார்பில் சால்வையணிவித்து கவுரவித்தார்.
பொருளர் A.சேகர் சந்தனமாலை அணிவித்தார்.
மாவட்டச் சங்கம் சார்பில் நினைவுப் பரிசாக ஷீல்டு ஒன்றை தலைவர்கள் ஆர்.கே, சி.கே.எம், மற்றும் பொது மேலாளர்
ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அனைத்துச் சங்க பொறுப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள்
வாழ்த்திப் பேசினர். நமது முன்னாள் சம்மேளனச் செயலர்
தோழர். ஆர்.கே நிறைவுப் பேருரையாற்றினார்.
அகில இந்திய துணைத் தலைவர் தோழர். சி.கே.எம், மாநிலச் செயலர் K.நடராஜன், மாநிலத் தலைவர் காமராஜ், மாநிலப் பொருளர் எல்.சுப்பராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நமது முதன்மைப் பொது மேலாளர் திரு. சி.வி.வினோத் அவர்கள், AIBSNLEA முன்னாள் மாநிலச் செயலர் N.வீரபாண்டியன், இந்நாள் மாநிலச் செயலர் C.துரையரசன், ஓய்வூதியர் சங்கத்தின்
தஞ்சை மாவட்ட பொதுச் செயலர் திரு. V.சாமிநாதன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர். D.கலைச்செல்வன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.
இவர்களோடு AIBSNLEA மாவட்டச் செயலர் S.பிரபாகரன், FNTO மாவட்டச் செயலர் AMF.ஜெயசீலன்,SEWA மாவட்டச் செயலர் M.முருகையன், மாநில மகளிரணி தலைவர் A.லைலாபானு ஆகியோரும் வாழ்த்தினர்.
மேலும், DGM ராஜாராம், CAO உதயன், AGM குணசேகரன், AGM விவேகானந்தன், N.மேகநாதன், K.சின்னப்பா, F.ஆரோக்கியதாஸ், S.இளங்கோவன் ஆகியோரும் வாழ்த்தினர்.
விழாவுக்கு வந்திருந்த தோழர்கள், தோழியர்கள் அனைவரும்
தோழர் S.பிரின்சுக்கு, சால்வை அணிவித்தும்,
SDOP கிளை நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவித்தனர்.
இறுதியாக தோழர். S.பிரின்ஸ் அவர்கள், கடந்த கால பல்வேறு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவைகளை நினைவு கூர்ந்து
சிறப்பானதொரு ஏற்புரையை நிகழ்த்தினார்.
பின்னர் தோழர் P.ராஜாஜி நன்றி கூற விழா நிறைவடைந்தது.

Subscribe to:
Posts (Atom)




































































