Thursday, 20 April 2017

ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக    ஆர்ப்பாட்டம்


தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 25-04-2017 காலை 10.00 மணி அளவில்   NFTE, BSNLEU, TEPU, SEWA சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    


                                                                                            மாவட்டசங்கம்

வாழ்த்துக்கள்






நமது தோழர்களின் அயரா உழைப்பு ஈடு 

இணை இல்லாதது.சிறப்பாக 

பணியாற்றியமைக்காக  தஞ்சை மாவட்ட NFTE   

சார்பாக வாழ்த்துகிறோம்.



வைப்புநிதி
GPF  வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியாக 
DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்யப்படும் என
 CORPORATE அலுவலகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும். 

இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள்  12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம் 
விண்ணப்பிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் IDA
ஏப்ரல் 2017 முதல் 117.1 சதமாக குறைந்துவிட்ட
 IDA உத்திரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, 13 April 2017

அண்ணல் அம்பேத்கார் 
பிறந்த நாள் விழா
 14/04/2017 – வெள்ளிக்கிழமை

வாழ்த்துக்கள்



Wednesday, 12 April 2017

இலாகா தேர்வு



டெலிகாம் டெக்னீசியன்-
இலாகா தேர்வு

டெலிகாம் டெக்னீசியன்
(டெலிகாம் மெக்கானிக்)
பதவிகளுக்கான இலாக்காத்தேர்வு
09/07/2017
அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
S.S.L.C., தேர்ச்சி பெற்ற RM/GR’D ஊழியர்கள் தேர்வெழுதலாம்.
விண்ணப்பிக்கும் நாள் : 01/06/2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24/06/2017
தேர்வுக்கட்டணம்
ரூ.750/= பொதுப்பிரிவினர்
ரூ.500/= SC/ST பிரிவினர்.
தமிழகம் மற்றும்
சென்னைத்தொலைபேசிக்கும் சேர்த்து
சென்னையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு நேரம் : 10.00 to 12.30
2.30
மணி நேரம்..
இலாக்காப்பயிற்சி = 50 மதிப்பெண்கள்
பொது அறிவியல் மற்றும் கணிதம் = 50 மதிப்பெண்கள்


மாவட்டத்தில் ஓரிருவருக்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்.