Saturday, 28 January 2017

சம வேலைக்கு ...சம ஊதியம் - திருவாரூர் 

 

25.1.2017 ல் ..
சம வேலை சம ஊதிய கருத்தரங்கு ...
  ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டிருந்தினர் ...

 





 

Wednesday, 25 January 2017

68வது குடியரசு தினம்


 

குடியரசு தின சிறப்பு கவிதை

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!

விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! – அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! – இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! – மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! – இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!


வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

Thursday, 19 January 2017

ஆர்ப்பாட்டம்...



ஜல்லிகட்டுக்கு... ஆதரவு... ஆர்ப்பாட்டம்...
18.01.2017
 நடத்திய போராட்டம்


மாநில  பண்பாட்டு உரிமைகளை  பறிக்கும் ...
பண்பாட்டை ...கலாச்சாரத்தை ...அழித்து...
வேடிக்கை பார்க்கும் ...மத்திய அரசை ...
மோடி சர்க்காரை ...கண்டித்து ..
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி ...
ஜல்லிக்கட்டு  தடையை  அவசர சட்டம் மூலம் நீக்க ...
வலியுறுத்தி நடைபெறும் ...
மாணவர் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ...
ஆதரவு தந்திடும் வகையில் .... 
அனைத்து ஊரக கிளைகளில்... 20.01.2017 ஆர்ப்பாட்டம்... 
நடத்திட... வேண்டுகிறோம்.

Wednesday, 18 January 2017

ஜனவரி - 18... தோழர். ஜீவா நினைவு நாள்...

Monday, 16 January 2017

வாழ்த்துக்கள்

                                              17/01/2017
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்...
அவர்களின் 
நூற்றாண்டு  தினத்தில் 
அவர் நினைவைப் போற்றுவோம்...

Wednesday, 11 January 2017

செய்திகள்


விடுபட்ட சில கேடர்களுக்குப் பதவிப்பெயர் மாற்றம் செய்வதற்காக DESIGNATION COMMITTEE பதவிப்பெயர் மாற்றக்குழு 
13/01/2017 அன்று கூடுகிறது. ஊழியர்  தரப்பில் 
NFTE மற்றும் BSNLEU சார்பாக தோழர்.C.சிங், 
தோழர்.அபிமன்யு மற்றும்  தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
------------------------------------------------------------------------
01/01/2017 முதல் 0.8 சத  IDA குறைவிற்கான DPE உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய IDA 119.5 சதமாகும்.
------------------------------------------------------------------------
BSNL உருவான பின் முதல் 9 மாதங்களில் 
ஓய்வு பெற்றவர்களும்,  01/10/2000க்கு முன்பு பதவி உயர்வு பெற்றவர்களும்  ஓய்வூதியக்குறைவை சந்தித்தார்கள். 
அவர்கள் தங்களுக்குப் பின்பு ஓய்வு பெற்றவர்களை விட குறைவான ஓய்வூதியத்தை இன்றும் பெற்று வருகின்றனர். BSNLலில் அமைக்கப்பட்ட ANOMALY  COMMITTEE  இப்பிரச்சினையை தீர்க்கவில்லை. எனவே AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் வழக்குத் தொடுத்தது. தற்போது வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. DOT நீதிமன்றத்தீர்ப்பை அமுல்படுத்துகிறதா அல்லது மேல்முறையீடு செல்கிறதா என்பது விரைவில் தெரிந்து விடும். வழக்கு மன்றம் சென்று நியாயம் பெற்ற AIBSNLPWA சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------
ஒரு காலத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கருணை அடிப்படையில் எழுத்தர் வேலை பெற்றனர். தற்போது எழுத்தர் பணிக்கு  பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக கணிணியில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். அவ்வாறு பட்டயப்படிப்பு படிக்காதவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை நிறுத்தப்படும் என்பது BSNL உத்திரவு.  அவ்வாறு COMPUTER DIPLOMA முடிக்காத SR.TOA  தோழர்களுக்கு ஒரு மாதப் பயிற்சி அளிக்க இலாக்கா உத்திரவிட்டுள்ளது. கருணை அடிப்படையில் SR.TOA பணி நியமனம் பெற்று COMPUTER DIPLOMA முடிக்காத தோழர்களுக்கு மேற்கண்ட உத்திரவு பொருந்தும்.

Sunday, 8 January 2017

வைப்பு நிதி



வைப்பு நிதியும் ஆதார் எண்ணும்

EPF  வைப்பு நிதித்திட்டத்தில் உறுப்பினராக உள்ள ஊழியர்கள் தங்கள் ஆதார் எண்ணை 31/01/2017க்குள் இணைத்திட வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது. அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும், ஓய்வூதியப்பங்களிப்பும் நிறுத்தப்படும் 
எனவும்   அரசு  மிரட்டலாக அறிவித்துள்ளது.

பத்தாண்டுகள் உறுப்பினராக இருந்த ஊழியர்களுக்கு  அவர்களது ஓய்விற்குப்பின்  ரூ.1000/= மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.   ஊழியர்களின் சம்பளத்தில் 1.16 சதம் ஓய்வூதியப் பங்களிப்பாக மாதந்தோறும் அரசால் செலுத்தப்படுகிறது. ஏறத்தாழ 850 கோடி ரூபாய் ஆண்டு தோறும் அரசு ஓய்வூதியப்பங்களிப்பு செய்கிறது
ஒப்பந்த ஊழியர்கள்  31/01/2017க்குள் கட்டாயம் 
 தங்களது ஆதார் எண்ணை வைப்பு நிதிக்கணக்குடன் இணைக்கவும்..
31/01/2017க்குள் ஒப்பந்தக்காரர் இடம் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.
                           தகல் S.பிரின்ஸ்