Friday, 18 September 2015

ஆதார் எண்

சர்வீஸ் புத்தகத்தில் ஆதார் எண் இணைப்பு

ஆதார் எண்களை ஊழியர்களுடைய சர்வீஸ் புத்தகத்தில் பதிவு செய்திட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே தோழர்கள் உடனடியாக தங்களது ஆதார் கார்டின் நகல்களை அவரவர் தலமட்ட அதிகாரிகளிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
JTO ஆளெடுப்பு விதி 
திருத்தங்கள்  ஒப்புதல் 

இன்று 18/09/2015 நடைபெற்ற BSNL வாரியக்கூட்டத்தில்  

JTO ஆளெடுப்பு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு 

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நமது 

NFTE மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.



17/09/2015 அன்று CMDஐ சந்தித்த 

நமது சங்கத்தலைவர்கள்  ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த மேற்கண்ட ஆளெடுப்பு விதி திருத்தத்திற்கு உரிய ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


இன்றைய கூட்டத்தில்...

JTO ஆளெடுப்பு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட
 திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும்...


JTO இலாக்காத்தேர்வு எழுத தற்போதுள்ள 
7 ஆண்டு சேவைத்தகுதி என்பது 
5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்...

இவற்றுக்கெல்லாம் மேலாக 


மிக நீண்ட நாட்களாக 


 அகலிகையாக காத்திருக்கும் 

 JTO தற்காலிகப் பதவி வகிக்கும் 

நமது TTA தோழர்களை

நிரந்தர  JTOவாக நிரந்தரம் செய்யவும் 

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிக நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற
தொடர் முயற்சி செய்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றிகள்.


Wednesday, 16 September 2015

தந்தை பெரியார் 1 37-வது பிறந்த நாள்



செப் - 17
தந்தை பெரியார் 
 1 37-வது பிறந்த நாள் 

Sunday, 13 September 2015

JTO பயிற்சி வகுப்பு



02/11/2015 முதல் 
JTO   PHASE  I பயிற்சி வகுப்பு துவங்குகிறது. 

சென்னை RGMTTCயில் 
34 பேர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளும்,

சென்னை மறைமலை நகர் RTTCயில் 
30 பேர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளும்,

திருவனந்தபுரத்தில் 
30 பேர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளும்,

நாக்பூரில் 30 பேர்களைக் கொண்ட 
ஒரு வகுப்பும் நடைபெறவுள்ளது.

ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் 
பயிற்சிக்கான உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
தோழர்களிடத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

பயிற்சி செல்லும் தோழர்களுக்கு  நமது வாழ்த்துக்கள்..

Thursday, 10 September 2015

Monday, 7 September 2015

JTO பயிற்சி வகுப்பு


JTO பயிற்சி வகுப்புகள் 
21/09/2015 முதல் துவங்கப்படும் என 
மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.  

சென்னை மீனம்பாக்கம் 
RGMTTC பயிற்சி நிலையத்தில் 
28 தோழர்களுக்கும், 
சென்னை மறைமலை நகர்
 பயிற்சி நிலையத்தில்
 27 தோழர்களுக்கும்
 முதற்கட்டமாக பயிற்சி 
துவங்கப்படுகிறது.

பயிற்சிக்கு செல்லும் 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

Friday, 4 September 2015

TEACHERS DAY


செய்திகள்





வருமான வரித்தாக்கல் செய்வதற்கு  07/09/2015 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரித்தாக்கல் செய்யாத தோழர்கள் 
NFTE சங்க அலுவலகத்தில் ON LINE மூலம் 
வரித்தாக்கல் செய்து கொள்ளவும்.

போனஸ் வரையறையை இறுதி செய்யும் பணி இன்னும் தொடர்வதால் இந்தாண்டிற்கு தற்காலிக போனசை அறிவிக்கக் கோரி 
நமது சங்கம் BSNL நிர்வாகத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

BSNL செல் கோபுரங்களைப் பிரித்து  தனி அமைப்பாக மாற்றுவதற்கு  ஒப்புதல் அளித்த மத்திய  மந்திரி சபையின் முடிவை எதிர்த்து 
செப்டம்பர் 16 அன்று நாடு தழுவிய தர்ணா நடத்த அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது

தர்ணா தலைநகர் டெல்லி, மாநிலத்தலைநகரங்கள் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறும்.
தமிழ் மாநில செயற்குழு 23/09/2015 அன்று
 மயிலாடுதுறையில் நடைபெறும்.
.
தமிழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட 10 மாநிலங்களின் வருமானம் குறைந்து வருவதால் கூடுதல் கவனம் செலுத்தி வருமானத்தைப்பெருக்க மாநில முதன்மைப்பொதுமேலாளர்களுக்கு CMD கடிதம் எழுதியுள்ளார்

வாழ்த்துக்கள்



சங்கஅறை கூவல்  ஏற்று வேலைநிறுத்தம்  செய்தஅனைவரையும்  மாவட்ட  சங்கம்  வாழ்த்துகிறது.
நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!!!