Tuesday, 17 February 2015
Friday, 13 February 2015
Tuesday, 10 February 2015
டெல்லி முடிவுகள் மதவாதத்துக்கு கிடைத்த மரண அடி :
டெல்லி தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பானது மதசார்பின்மைக்கு கிடைத்த வெற்றியாகும். வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய பாஜ தலைவர்களாலேயே பாஜ வீழ்த்தப் பட்டது. டெல்லியில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்ட மன்ற தேர்தல் தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு வரலாற்று செய்தியை முன்னிறுத்துவது போல் உள்ளது. குறிப்பாக மத்தியில் பாஜ ஆட்சியில் இருந்த போதும், ஆள் பலம், படை பலம், பண பலம் இருந்த போதும் மக்களின் முடிவு எப்போதும் நல்லிணக்கத்திற்கும், மதசார்பின்மைக்கும் கொடுக்கும் ஆதரவுதான் இந்தியாவில் மிகவும் உறுதியானது என்பதை நிரூபித்துள்ளது.டெல்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் சரி, அதற்கும் முன்பும் சரி BJP தலைவர்கள் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி நாடு
Monday, 9 February 2015
Sunday, 8 February 2015
Friday, 6 February 2015
TTA - இலாக்காத்தேர்வு
TTA புதிய ஆளெடுப்பு விதிகளின்படி 2014ம் ஆண்டிற்கான
TTA காலியிடங்களுக்கான இலாக்காப் போட்டித்தேர்வு
நடத்துவதற்கான ஒப்புதல் BSNL நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
- 2014ம் ஆண்டிற்கான காலியிடங்களில் 50 சதம் இலாக்கா ஊழியர்களால் நிரப்பப்படும்.
- ஏற்கனவே இந்த 50 சதத்தில் 40 சத காலியிடங்கள் போட்டித்தேர்வாலும், 10 சத காலியிடங்கள் உரிய கல்வித்தகுதி உள்ள ஊழியர்களால் நேரடி நியமனத்தாலும் WALK IN GROUP நிரப்பப்பட்டது. தற்போது இந்த 10 சத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 01/07/2014 என்பது தகுதி தீர்மானிக்கும் தேதியாக இருக்கும்.
- நாடு முழுக்க ஒரே தேதியில் தேர்வு நடைபெறும்.
- தேர்வில் வழக்கம் போல் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு.
- குறைந்த பட்ச கல்வித்தகுதி +2 ஆகும்.
TTA
புதிய ஆளெடுப்பு விதிகளில் சங்கங்கள் கோரிய மாற்றங்கள் எதனையும்
நிர்வாகம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் தேர்வாவது
நடக்கின்றதே என தோழர்கள் சமாதானம் அடைய வேண்டும். தகுதியுள்ள தோழர்கள்
இன்றிலிருந்தே தேர்வுக்கும்,
மாற்றலுக்கும் மனதளவில் தயாராக வேண்டும்.
ஒருவரிச்செய்திகள்
- போனஸ் குழுக்கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும்.
- BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கான பணி ஓய்வுப்பலன்கள் அளிப்பதற்கான குறிப்பு நிர்வாகப் பரிசீலனையில் உள்ளது.
- தமிழகத்திற்கு SIM CARD ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கருணை அடிப்படை பணி வழங்குவதற்கான பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க நிர்வாகத்தை மாநிலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- ERP இம்சைகளை சரி செய்ய மாநில நிர்வாகத்தை மாநில சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- JTO தேர்வு முடிவுகளை வெளியிட உரிய நடவடிக்கைகள் தொடருகின்றன.
- விடுபட்ட BSNL பணி நியமன பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.
- தமிழ் மாநில செயற்குழு 10/02/2015 அன்று சென்னையில் நடைபெறும்.
- மீத்தேன் எரிவாயுத்திட்ட எதிர்ப்புக்கூட்டம் விரைவில் கும்பகோணத்தில் NFTE - TMTCLU சார்பாக நடைபெறும்.
Thursday, 5 February 2015
Wednesday, 4 February 2015
Tuesday, 3 February 2015
Monday, 2 February 2015
சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள் ! ...
சர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறு களைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிட லாம்.ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண். இந்தக் கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட பொருள்களைச் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும், கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட சத்தான எட்டு பழங்களும், அதன் பலன்களும் இங்கே...
ஆப்பிள்
நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் குறைகிறது என்கின்றன ஆய்வுகள்.
ஆரஞ்சு
ஆரஞ்சில் வைட்டமின்-சி, நார்ச்சத்து, தையமின் மற்றும் பல்வேறு அத்யாவசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ள பழம். தாராளமாக எடுத்துக் கொள்லலாம்.
செர்ரி
பீட்டா கரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் செர்ரி. தினமும் செர்ரி பழம் ஒரு கப் சாப்பிடலாம்.
பேரிக்காய்
வைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்த பழம். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும்
கருப்பு ப்ளம்ஸ்
ஆன்தோ சைனின் நிறைந்தது. கார்போஹைட்ரேட், சீராகச் செரிப்பதற்கும், சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. தினமும் ஒரு கப் கருப்பு ப்ளம்ஸ் சாப்பிடலாம். கருப்பு ப்ளம்ஸ் விதைகளை அரைத்து பொடியாக்கி பாலில் போட்டுக் குடிக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும். கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
கிவி
வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு பழம் சாப்பிடலாம்.
கொய்யாப்பழம்
நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் நிறைந்தது. தினம் ஒன்று சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட, கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்..
Subscribe to:
Posts (Atom)










.jpg)
