Wednesday, 20 September 2017

அஞ்சலி...தோழர்.S.பிச்சுமணி 



புதுவையின் மூத்த தோழர்.S.பிச்சுமணி அவர்கள் 
உடல்நலக்குறைவால் சென்னையில் இயற்கை எய்தினார். 

போராட்டங்களில் புடம் போடப்பட்டவர். 
பல்வேறு பழிவாங்குதல்களைச் சந்தித்த போதிலும் 
அயராது சங்கப்பணி ஆற்றியவர். 
புதுவை NFTE இயக்கத்தோடு இரண்டறக்கலந்தவர். 

அவரது மறைவிற்கு நமது செங்கொடி தாழ்த்திய 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

NFTCL

நமது தோழர்.இளங்கோவன் ATT (Late) பட்டுக்கோட்டை இறந்த பிறகு சென்னை சொஷைட்டியிலிருந்து அவரது குடும்பத்திற்கு வர வேண்டிய நிலுவைதொகை போதிய ஆவணங்கள் கொடுக்கப்படாத காரணத்தால் இரண்டுஆண்டு காலமாக நிலுவையில் இருந்தது.நமது NFTCL மாவட்ட சங்கம்
தலையிட்டு நிலுவை தொகையானரூபாய் 124764/-ஐ தோழர்.இளங்கோவின்
(லேட்)மனைவியும் தற்போது நமது NFTCL உறுப்பினர் திருமதி ரேணுகா இளங்கோவனிடம் பெற்று தந்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்துள்ளது.
முயற்சி மேற்கொண்ட மாவட்ட சங்கத்திற்கு நமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.ரூபாய்.2000/- NFTCL சங்கத்திற்கு நன்கொடை தந்த உதவிய தோழியர்ரேணுகா இளங்கோவன் அவர்களுக்கு  கிளை சார்பாக நன்றியினை தெரிவித்து  கொள்கிறோம்.
                     

இன்னும் பல சாதனை  புரிய வாழ்த்துக்கள்  
கிளை சார்பாக    நன்றி  !   நன்றி  !

தியாகத்தை நினைவு கூர்வோம்




செப்டம்பர் 19 தியாகிகள் தினம் குடவாசல் தொலைபேசி நிலைத்தில்

நடைபெற்றது.

அதன் காட்சிகள்














Tuesday, 19 September 2017

NFTCL


சிறந்த ஊழியர் விருது அறிவிப்பு

தமிழ் மாநிலத்தின் 2016ம் ஆண்டிற்கான 
சிறந்த அதிகாரிகள் மற்றும் ஊழியருக்கான 
VISHIST SANCHAR SEWA 
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள்

S.குணசேகர் – TM -  தூத்துக்குடி
S.இராதாகிருஷ்ணன் – DRIVER – நெல்லை
V.மணி – SR.TOA – காரைக்குடி
S.மைக்கேல் அல்போன்ஸ் – STM – கோவை
V.சந்திரசேகர் – SR.TOA – சென்னை
S.கிருஷ்ணன் – TTA – குடந்தை
PB.பாலாஜி – TTA – கோவை
G.பிரியா – TTA – திருச்சி

அதிகாரிகள்

S.டைட்டஸம் – SDE – நாகர்கோவில்
O.அன்பழகன் – SDE - திருச்சி
VK.முரளிதரன் – JAO – சென்னை
A.பாண்டியன் – AGM – காரைக்குடி
K.சமுத்திரவேலு – DGM – கடலூர்
V.சிவக்குமார் – SR.SDE – சென்னை
விருது பெற்ற தோழர்களுக்கு நமது நல்வாழ்த்துக்கள்.
காரைக்குடி மாவட்டத்திற்கு ஊழியர் மற்றும் அதிகாரிகள் 
என இரண்டு பிரிவிலும் விருதுகள் கிடைத்துள்ளன.
விருது பெற்றுள்ள தோழர்.V.மணி நமது சங்கத்தோழர் என்பதும், விரைவில் ஓய்வு பெறவுள்ள அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு மிக்க மகிழ்ச்சி.

அதிகாரிகள் பிரிவில் விருது பெற்றுள்ள 
தோழர். A.பாண்டியன் SNEA சங்கத்தின் மாவட்டச்செயலர். 
நேர்மையும் கடமை உணர்வும் கொண்ட தோழர். சங்கப்பற்று மிக்கவர். இருவருக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.

Thursday, 14 September 2017

ஆர்ப்பாட்டம்


BSNL  அனைத்து அதிகாரிகள் & ஊழியர்கள் கூட்டமைப்பு 
BSNL செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து
 துணை நிறுவனம் துவங்க ஒப்புதல் அளித்துள்ள
 மத்திய அமைச்சரவையின் 
BSNL விரோத முடிவைக் கண்டித்து...

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் 
ஊழியர்கள் சங்கங்கள் இணைந்த...

நாடு தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்

15/09/2017 – வெள்ளிக்கிழமை –  10.00 மணி
CTMX அலுவலகம் – தஞ்சை

தோழர்களே… அணி திரள்வீர்…

இரங்கல்



                 

அம்மாபோட்டை தொலைப்பேசி நிலையத்தில்  பணிபுரியும்          தோழர் S.சண்முகம்  TT அவர்கள் (14.09.2017)இன்று இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது NFTE & NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம்  15.09.17 நாளை நடைப்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.




Wednesday, 13 September 2017

திருவாரூர் இரங்கல் கூட்டம்









தோழர்.T.முத்துக்கிருஷ்ணன் 

SEWA BSNL தமிழ்மாநிலச்செயலர் 
தோழர்.T.முத்துக்கிருஷ்ணன் 
அவர்களின் மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
                                                       உரித்தாக்குகின்றோம்.

Tuesday, 12 September 2017

NFTCL



செல்ல விட மாட்டோம்… சேவை மையங்களை…







நாடு முழுவதுமுள்ள...BSNLன்...
3300 வாடிக்கையாளர் சேவை மையங்களில்...
சுமார் 500 சேவை மையங்களைத் 
தனியார் வசம் ஒப்படைக்கத்துடிக்கும்
BSNL நிர்வாகத்தின் மோசமான முடிவை எதிர்த்து
சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..

கண்டன உரை

தோழமைப்பங்கேற்பு 

தூய சேவை… நம் கொள்கை…
துரித சேவை…. நம் குறிக்கோள்….
தூய சேவை... தொடர்ந்திடுவோம்…
துரித சேவை... பெருக்கிடுவோம்….
தனியார் சேவை... தடுத்திடுவோம்…
அணி திரள்வீர்…. தோழர்களே….




தர்மபுரி மாவட்டத்தில் TRANSMISSION பிரிவில் பணிபுரிந்த தோழர்கள் 02/09/2017 அன்று பணிக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியது என்ற கொடும் செய்தி கேள்வியுற்று மிக்க துயரம் கொள்கின்றோம். இரண்டு தோழர்கள் உயிர் நீத்துள்ளனர். நான்கு தோழர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  உயிர் நீத்த தோழர்.ஜீவா புதிதாக BSNLலில் 
JE பணிநியமனம் பெற்றவர். மற்றொரு தோழர்.கஜேந்திரன் 
நீண்ட நாட்களாக ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிபவர். 

இரண்டு தோழர்களின் குடும்பங்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் இல்லை என்பது மிக்க கொடுமை. இருவருக்குமே 
EPF திட்டத்தில் உள்ள மிகச்சொற்பக் குடும்ப ஓய்வூதியமே கிடைக்கும்.  BSNL நியமன ஊழியர்களுக்கு இன்னும் ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அகால மரணம் அடையக்கூடிய ஊழியர்களுக்கு புதிய நலத்திட்டம் அமுல்படுத்தப்படுவதும் பரிசீலனையில்தான் உள்ளது. பணியில் இருக்கும் போது உயிர் நீக்கும் ஒப்பந்த ஊழியர்களின் நிலை இன்னும் கொடுமையானது. BSNLக்காக உழைத்து உயிர் நீத்த தோழர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது ஒவ்வொரு ஊழியரின் கடமையாகும். மாநிலம் தழுவிய அளவில் இதற்காக ஒரு நிதி திரட்டப்பட்டு அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டும்.

உயிர் நீத்த தோழர்களின் மறைவிற்கு 
 நமது மனங்கசிந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம். 
 
அனிதா... கலைக்கப்பட்ட கனவு… 
மருத்துவப் படிப்பு கலைந்தது... மரணம் அழைத்தது...
மோசமான ஒரு  சமூகத்தில்..
தற்கொலைகள் உற்பத்தி செய்யப்படும்….
என்றார் கார்ல் மார்க்ஸ்…

இதோ…
இந்தியதேசத்தில்…
எண்ணற்ற தற்கொலைகள்
உற்பத்தி செய்யப்படுகின்றன….

அதில் உச்சக்கட்டம்தான்..
நீட் தேர்வால்..
மருத்துவப்படிப்புக் கனவு கலைந்த…
மாணவி அனிதாவின் தற்கொலை…

இது தற்கொலையல்ல… கொலை…
ஒரு சமூகத்தின் மீதான கொலை….
ஒரு இனத்தின் மீதான கொலை…

மருத்துவராகி…
எண்ணற்ற உயிர்களைக்
காக்க வேண்டிய ஒரு உயிர்..
இன்று மரித்து விட்டது…

இந்த தேசத்தில்…
வசிப்பது அரிது…
மரிப்பது மட்டுமே எளிது….

நீட்தேர்வை ரத்து செய்வோம் என
நீட்டி முழக்கினார்கள்…
நெட்டைப் புலம்பல்கள்…

சாக வேண்டியது…
அனிதாக்கள்  அல்ல…
மானங்கெட்டு வாழும்…
அதிகார வர்க்கமும்…
அரசியல்வாதிகளும்தான்…

சொரணை கெட்ட சமூகத்தில்…
சொரணையோடு வாழ்ந்து மறைந்த…

அனிதாவிற்கு நமது அஞ்சலி உரித்தாகுக….

Friday, 1 September 2017

வாழ்த்துக்கள்





                           


இரவு நேர இலவச அழைப்பு

BSNL வாடிக்கையாளர்களுக்கும்…
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது போல…
BSNLலில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்.. 
GROUP ‘B’ அதிகாரிகளுக்கும்...
இரவு நேர இலவச அழைப்பு வசதி 
அவர்களின் இல்லங்களில் உள்ள
 தொலைபேசிகளில் வழங்கப்படும் 
என CORPORATE அலுவலகம் 
29/08/2017 அன்று உத்திரவிட்டுள்ளது. 

மிக நீண்ட நாட்களாக எழுப்பப்பட்ட 
மேற்கண்ட கோரிக்கை அகில இந்திய JCMல்
 விவாதிக்கப்பட்டு முடிவுகள் 
மேற்கொள்ளப்பட்டு தற்போது  
உத்திரவிடப்பட்டுள்ளது. 
JCM ஊழியர் தரப்பிற்கு நமது நன்றிகள்..