Wednesday, 12 October 2016

பறிகொடுத்த போனஸ் உரிமை மீட்பு





உரிமை வந்த... இந்த மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில்...,
நமக்கு உரிமையை பெற்று தந்த... நமது NFTE மத்திய சங்கத்தையும்...,
நமது தலைவர்களையும் கெளரவிப்பதோடு...,
இந்த மகிழ்ச்சியை..., ஊழியர்களோடு...,
பகிர்ந்து கொள்ளும் விதமாக...,

                                       15-10-2016 அன்று அனைத்து கிளைகளிலும்...,
இனிப்பு வழங்கி..., இந்த உரிமை பெருவிழாவை..., 
கொண்டாடிட.., NFTE தஞ்சை மாவட்ட சங்கம்...,

வேண்டு கோள் விடுக்கிறது.

குறிப்பு :- தோழர்கள் அனைவரும் மாநில சங்கத்திற்கு ரூ  50/- நன்கொடையாக வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தோழமையுடன் 
          மாவட்டச் சங்கம், தஞ்சை. 

Friday, 7 October 2016

PLI (Bonus) :





இதனை NFTE சங்கம் முடிக்கும்

  என்றாய்ந்து அங்கீகாரம் தந்தார்கள்

  தோழர்கள்.. போனஸ் பெற்று தரும் என்று

  நம்பினார்கள்..அவர்கள் நம்பிக்கை வீண்

  போகவில்லை. சாதனைகள் பல

  படைக்கும் NFTE சங்கம்; வேதனைகள்

  இனி முடியும் என்று எண்ணி

  வாக்களித்தார்கள் -- NFTE சாதித்துள்ளது.
   
அகில இந்திய அளவில் போனஸ்

  கிடைப்பதற்கு தொடர்ந்து போராடி வரும்

  தலைவர். இஸ்லாம் அவர்களின்

  முயற்சியை பாராட்டுவோம் - நன்றி

  தெரிவிப்போம். இனியும் பணி தொடரும்.

 நிர்வாகம் 3000 போனஸ் வழங்க

  சம்மதித்துள்ளது. உத்தரவு காண ....இங்கு சொடுக்குக ....ஆனால் 2015-2016

  போனஸ் வழங்கப்படும் வரை நமது போராட்டம்

தொடரும்......

Thursday, 6 October 2016

01/10/2016 -  IDA  உத்திரவு

01/10/2016 முதல் உயர்ந்துள்ள 
5.5 சத IDA  உயர்விற்கான 
 DPE  உத்திரவு 
04/10/2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது .

மொத்தப்புள்ளிகள் 120.3 சதம்.
BSNL  உத்திரவு 
விரைவில் வெளியிடப்படும்.
JAO தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு உடனடியாக பயிற்சி வகுப்பு துவக்குவதற்கு ஹைதராபாத்தில் உள்ள NATFM பயிற்சி மையத்திற்கு CORPORTE அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் தற்காலிகப் பதவி உயர்வு அளிப்பதற்கு விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன. 03/11/2016க்குள் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டால் தற்காலிகப் பதவி உயர்வு நடைமுறைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
================================================
BSNL ஊழியர்களுக்கு மாதம் ரூ.200/-க்கு அலைபேசியில் இலவசமாகப் பேசும் வசதி தரப்பட்டிருந்தது. இதில் ரூ.50க்கு தனியார் தொலைபேசியில் பேசுவதற்கு வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி செப்டம்பர் மாதத்திற்குப் பின் தரப்படவில்லை. மேற்கண்ட வசதியை ஊழியர்களுக்கு அளித்ததின் மூலம் BSNL பழுது நீக்கும் சேவை FRS மேம்பட்டுள்ளதா? என CORPORATE அலுவலகம்
 மாநில நிர்வாகங்களைக் கேட்டுள்ளது. 
மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்தபின்பு 
மேற்கண்ட வசதியை தொடருவது பற்றி முடிவெடுக்கப்படும்.
================================================
2014-15ம் ஆண்டிற்கான போனஸ்  ஒப்புதல்  
REMUNERATION COMMITTEE எனப்படும் BSNL வாரிய 
ஊதியக்குழுவிற்கு   அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரம் 
உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, 1 October 2016

IDA

01/10/2016 முதல் IDA 5.5 சதம் உயர்ந்துள்ளது. 
இத்துடன் மொத்தப்புள்ளிகள் 120.3 சதமாகும்.