Monday, 19 September 2016

வெற்றியை ...நோக்கி ...போனஸ் ...






தோழர்களே! நாம் ஆவலுடன் எதிர்பார்த்த போனஸ் நிர்வாகத்தால் ஏற்று கொள்ளப்பட்டது. அனைவருக்கும் 2014-2015 க்கான ருபாய் 3000/- வழங்குவதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதற்கான உத்திரவு விரைவில் வெளியாகும்.
2015-2016 க்கான போனஸ் தொகை குறித்து ...
செப் 30 க்கு பிறகு பேச்சுவார்த்தை ....தொடருமாம் ..

இதற்காக தொடர்ந்து போராடிய நமது அகில இந்திய தலைவர் இஸ்லாம் அவர்களையும் பாராட்டுகிறோம்

Wednesday, 14 September 2016

தமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம்





தமிழகத்தில் DELOITTE  குழுவின் பரிந்துரையான
 வணிகப்பகுதிகள் அமுலாக்கம் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ் மாநில நிர்வாகம் முதற்கட்டமாக இரண்டு வணிகப்பகுதிகள் உருவாக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது

  • கோவை வணிகப்பகுதியில் குன்னூர் மாவட்டம் இணைக்கப்படும்.
  • தஞ்சை வணிகப்பகுதியில் குடந்தை மாவட்டம் இணைக்கப்படும்.

கோவை  PGM தலைமையிலான வணிகப்பகுதியாகவும்...
தஞ்சை GM தலைமையிலான வணிகப்பகுதியாகவும்... அறிவிக்கப்பட்டுள்ளது.

PGM தலைமையிலான வணிகப்பகுதியில்...
ஒரு PGM... ஆறு GM.. பன்னிரண்டு DGMகளும்...

GM தலைமையிலான வணிகப்பகுதியில்...
ஆறு  DGMகளும்...பணி செய்வார்கள்...

இதற்கான உத்திரவு 12/09/2016 அன்று
மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற மாவட்டங்களும் வணிகப்பகுதியில் இணைக்கப்படும்.


Friday, 9 September 2016

ஊக்கத்தொகை 

புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை 
புது இணைப்புக்களைப் பெற்றுத்தரும் BSNL ஊழியர்களுக்கு 
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தரைவழித்தொலைபேசி இணைப்பிற்கு ரூ.100/-
  • தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்பிற்கு ரூ.200/-
  • முதல் பில் கட்டப்பட்டபின் ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும்.
  • 12/09/2016 முதல் இத்திட்டம் அமுலுக்கு வருகிறது.

தோழர்களே...
நமது நிறுவனம் மிகவும் மலிவான விலையில்...
இந்தியாவில் வேறெந்த நிறுவனத்திலும் இல்லாத வகையில்..
புதுப்புது அதிரடி திட்டங்களை.. 
மக்களைக் கவரும் திட்டங்களை...  
தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை 
இணைப்புக்களில் அறிவித்துள்ளது.
இந்த சலுகைகளும்... 
நமது சேவைகளும் மக்களைச்சென்றடைய..
நாம் நமது பங்கைச்செலுத்துவோம்...

ஊக்கமுடன் பணிபுரிவோம்..
ஊக்கத்தொகை பெறுவோம்...
இது ஒரு  சிறப்பு போனஸ்...

Thursday, 8 September 2016

JTO இலாக்காத்தேர்வு
2015-16ம் ஆண்டிற்கான  காலியிடங்களுக்கான  
JTO இலாக்காத்தேர்வை 
நடத்துவதற்கு நிர்வாகம் அறிவிப்புச்செய்துள்ளது.

  • மாநில நிர்வாகங்கள் அறிவிப்புச்செய்யும் நாள்  : 15/09/2016
  • இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நாள் : 10/10/2016
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/10/2016
  • விண்ணப்பங்களை பரிசீலிக்க கடைசி நாள் : 15/11/2016
  • அனுமதிச்சீட்டு வழங்கும் நாள் : 30/11/2016
  • தேர்வு நடைபெறும் நாள் : 11/12/2016
தோழர்கள்... தயாராகவும்...

Friday, 2 September 2016

2016 செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்...!



ஓர் மகத்தான வெற்றி...!!
தஞ்சை மாவட்டம்...! ஓர் பார்வை...!!
நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!!!

அனைத்து மத்திய மற்றும் நமது BSNL தொழிற்சங்கங்களின் 
போராட்ட அறை கூவல்படி நாடு முழுவதும் 02-09-2016
இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் 
மிகச்சிறப்பாக நடைப் பெற்றது.

நமது தஞ்சை மாவட்டத்தில்:
மொத்த ஊழியர்கள் (Group C & Group D): 609
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 354
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 115
பணி புரிந்த ஊழியர்கள்: 140

நமது மாவட்டம் முழுவதும் அனைத்து வாடிக்கையாளர் 
சேவை மையங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான அலுவலகங்களில்
ஊழியர்கள் பணிக்கு வரவில்லைஅனைத்து ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.



மாநில சங்க நிர்வாகிகள்மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை
செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் மற்றும்
ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் தஞ்சை மாவட்ட
 கூட்டமைப்பின் வாழ்த்துக்கள்...

தோழமையுடன்...
மாவட்ட செயலர், NFTE - BSNL














Thursday, 1 September 2016

அகில இந்திய வேலை நிறுத்தம்
மத்திய அரசின்...
தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்த்து...
தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் கொடுமை கண்டித்து...
குறைந்தபட்சக்கூலி 18000 வழங்கக்கோரி...
குறைந்தபட்ச ஓய்வூதியம் 3000 வழங்கக்கோரி...
விஷம் போல் ஏறும் விலையைக் குறைக்கக்கோரி...

செப்டம்பர் -2
அனைத்து மத்திய சங்கங்களின்.. 
20 கோடி தொழிலாளர் பங்கேற்கும்...
இந்திய தேசம் காணப்போகும்...
உலகின் மாபெரும் வேலை நிறுத்தம்
வேலை செய்வது நம் கடமை...
வேலைநிறுத்தம் நம் உரிமை...
கலந்து கொள்வதே நம் பெருமை...
கடமை செய்வோம்... 
உரிமை வெல்வோம்...