Wednesday, 13 April 2016

தேர்தல் பிரசாரம்


12.04.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம்  தஞ்சைCTMX தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்

நமது சங்கத்தின் மாநிலத் செயலர்    தோழர்.பட்டாபி 
         மாநிலத் துணைச் செயலர் தோழர். K.நடராஜன், NFTE


தோழர்.K.S.K 

தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர் NFTE

தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்  செயலர் NFTE

தோழர் C.குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA

தோழர் S.சேகர் மாவட்டச்  செயலர் TEPU

கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள்200 தோழர்கள் கலந்து கொண்டனர்





செய்திகள்


 2007ம் ஆண்டு   TTA ஆளெடுப்பில் 

பணி நியமனம் பெற்ற அனைவரையும்   

22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு

 தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது


2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும்பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும் 

தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

================================விதி 8 - RULE 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோழர்கள் தங்களது விருப்ப மாற்றலை ERP மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என CORPORTE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.

================================

BSNL அதிகாரிகளுக்கான

POST PAID  செல் இலவச உபயோக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

B பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ.700/- வரையிலும்...

A பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ800/-வரையிலும்...

இலவசமாகப் பேசிக்கொள்ளலாம்.


அனைத்து அதிகாரிகளுக்கும்  STD வசதியும்...

தேசம் முழுவதும் இலவசமாக ஊர்சுற்றும் ROAMING வசதியும் உண்டு...

================================

தமிழகத்தில் DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 08/04/2016 அன்று அனைத்து அதிகாரிகள் அமைப்புக்களையும்  மாநில நிர்வாகம் சந்தித்துள்ளது. தற்போதைய 17 SSA  - மாவட்டங்களை 

10 வணிகப்பகுதிகளாக BUSINESS AREAவாக  மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. DELOITTE சம்பந்தமாக ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசனை நடைபெறவில்லை. தேர்தலுக்குப்பின் கலந்தாலோசனைக்கூட்டம்  நடைபெறலாம்.





































Thursday, 7 April 2016


 
பொய்யன் அபிமன்யுவின் சாயம் வெளுத்தது ..
NFTE-BSNL நிர்வாகத்தோடு இரண்டு இலக்க போனசிற்கு ஒத்துக்கொண்டது எனக் கூறி BSNLEU ஊழியர்களை திசை திருப்பி வந்தது. இதனை கண்டித்த நிர்வாகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை பார்த்தாவது ஊழியர்கள் BSNLEU சங்க மோசடியை புரிந்து கொள்வார்கள். இந்த தேர்தலில்  நிராகரிப்பார்கள்.


பாரீர் கடிதம்...



Wednesday, 6 April 2016

                                         தேர்தல் செய்திகள் 

வாக்குச்சாவடிகள்

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேசம் முழுவதும் 
2150 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகின்றது.
தமிழகத்தில் 116 வாக்குச்சாவடிகள்.
==============================================
மூன்றாவது அணி

7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் 
FNTO சங்கம்
BSNLWRU, AIBCTES,  BSNLSU, 
BSNLEC, FNTOBEA மற்றும் BSNLEAU (அண்ணா)
ஆகிய  6  சங்கங்களோடு கூட்டணி அமைத்துள்ளது.
 
தேர்வு செய்திகள்

JAO இலாக்காத்தேர்வு 

JAO இலாக்காத்தேர்விற்கு  விண்ணப்பிக்க   
14/04/2016 வரை   அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு இணையத்தின்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் திருத்தங்கள் செய்ய நினைத்தால் அத்தகைய  திருத்தங்களை  இணையத்தில் 
17/04/2016க்குள் மேற்கொள்ளலாம்.
===============================================================
2016-17ம் ஆண்டிற்கான  தேர்வுக்கால அட்டவணை 

2016-17ம் ஆண்டிற்கான இலாக்கா மற்றும் நேரடித்தேர்வுக்கான 
திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
JTO இலாக்காத்தேர்வுகள் காலியிடங்களுக்கு 
ஏற்றவாறு  3 கட்டமாக நடத்தப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளில் சில...


JTO இலாக்காத்தேர்வு 
2013-14ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு  நாள்  22/05/2016
2014-15ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு  நாள்  28/08/2016
2015-16ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு  நாள்  27/11/2016.
JAO இலாக்காத்தேர்வு 
40 சத ஒதுக்கீட்டுத்தேர்வு  நடைபெறும் நாள் : 17/07/2016
10 சத ஒதுக்கீட்டுத்தேர்வு  நடைபெறும் மாதம்  : ஆகஸ்ட்  2016

JTO நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : டிசம்பர் 2016
JAO  நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : பிப்ரவரி  2017
TTA   நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : ஜனவரி   2017

05.04.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் திருவாரூர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்

நமது சங்கத்தின் சம்மேளனசெயலர்G.ஜெயராமன்.            மாநிலத் துணைச் செயலர் தோழர். K.நடராஜன், NFTE

தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர் NFTE

தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்  செயலர் NFTE

தோழர் C.குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA

தோழர் S.சேகர் மாவட்டச்  செயலர் TEPU

கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன் கூட்டங்களில் கலந்து கொண்டனர். கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள் .     தோழர்கள்

பங்கேற்க எழுச்சியுடன் துவங்கியது.



























 
 

Monday, 4 April 2016

ஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA 
விலைவாசிப்படி 01/04/2016 முதல்  
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது

UNSKILLED LABOUR                  

A  பிரிவு  நகரம்            B பிரிவு   நகரம்                                C பிரிவு  நகரம் 
ரூ.368/=           ரூ.307/=                           ரூ.246/- 
C பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.10/-ம் 
B பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.13/-ம் 
A  பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.13/-ம் 
விலைவாசிப்படி உயர்ந்துள்ளது.
வைப்பு நிதி - வானம் பார்த்த பூமி  


டெல்லியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படாத  காரணத்தால் 
சென்ற  மாதம் GPF பட்டுவாடா நடைபெறவில்லை. 

இதுநாள் வரை ஏதோ ஒரு தேதியில்
GPF  பட்டுவாடா நடைபெற்று வந்தது. 
இப்போது அதுவும் போய் விட்டது. 
BSNLEUவின் அரிய  சாதனைகளில் இதுவும் ஒன்று. 

இந்த மாதம் GPF விண்ணப்பிக்க விரும்பும் பாக்கியசாலிகள் தங்களது  மார்ச் மாத விண்ணப்பத்தை ERPயில் CANCEL  செய்ய வேண்டும். அதன் பின் புது விண்ணப்பம் செய்ய வேண்டும் என 
மாநில நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது .

தற்போது  ERPயில் சம்பளப்பட்டியல் கூட எடுக்க முடியவில்லை. 
ERP தோழர்களைத் தொடர்ந்து  சுற்றில் விடுகிறது. 
எனவே மார்ச் மாத GPF தொகை கணக்கில் சேர்ந்து விட்டதா 
என்பதை உறுதி செய்த பின் தோழர்கள் GPF விண்ணப்பிக்கவும். 

அது சரி...இந்த மாதமாவது GPF பட்டுவாடா நடக்குமா?
 என நீங்கள் கேட்பது நமது காதில் ஒலிக்காமல் இல்லை.  
வானிலை அறிக்கை இரமணனும் 
சென்ற மாதம் ஓய்வு பெற்று விட்ட நிலையில் 
நமக்கு வைப்புநிதி அறிக்கை யார்தான் தரமுடியும்...

நமது விவசாயிகள் வானம் பார்த்து 
எப்படி வாழ்கின்றார்கள் என்று 
நாம் விரைவில்  கற்றுத்தேற வேண்டும்.
அதுவே நமது பிரச்சினைக்குத் தீர்வாகும்...