Thursday, 8 October 2015

அக்டோபர்-9 சேகுவேரா கொல்லப்பட்ட நாள் (1967)

செய்திகள் 
தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில்  7 தோழர்கள் வெற்றி பெற்றதாக  தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

09/10/2015 முதல்  GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் பரிந்துரை  அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
திறந்த நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில சங்கமும்  முயன்று வருகின்றன.

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி  TOWER CORPORATION அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும்   DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

TM பதவிகளில் ST  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை  பற்றி விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

Tuesday, 6 October 2015

மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்


 மாவட்ட தலைவர் S.பிரின்ஸ் தலைமையில் மாவட்டசெயலர் T.பன்னீர்செல்வம் முன்னிலையில் ,


         
6.10.2015

இடைக்கால  போனஸ்

கோரி ஆர்ப்பாட்டம்

மாநில துணை செயலர் k.நடராஜன் . விளக்கவுரை ஆற்றினார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சிகர  வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்!












           
ஒப்பந்த ஊழியர்களுக்கான 
VDA - விலைவாசிப்படி உயர்வு 
             தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE  DEARNESS ALLOWANCE - விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில்  வெளியிட்டுள்ளது.

=================================================
பிரிவு                      A  நகரம்                             B  நகரம்           C   நகரம் 
=================================================
UNSKILLED                    353                                 294                       236
WATCH AND WARD        390                                 333                     276
WITHOUT ARMS  
WATCH AND WARD        430                                 390                      333
WITH ARMS 
=================================================
                                  
நிரந்தர ஊழியர்களுக்கு 01/10/2015  முதல்
 IDA அதிகபட்சமாக 5.3 சதம் உயர்ந்துள்ளது. 
 ஆனால் அன்றாடக்கூலிகளாகப் பணி புரியும்
 தொழிலாளர்களுக்கு  மிகக் குறைந்த அளவே 
VDA கூடியுள்ளது.  
C பிரிவு நகரில் ஒரு நாள் கூலி 
ரூ.233/=ல் இருந்து ரூ.236/= ஆக ஒரு நாளைக்கு
ரூ.3/= மட்டுமே உயர்வடைந்துள்ளது. 

மேலும் ஒப்பந்த ஊழியர்கள் எந்தவிதமானப் பணி 
செய்தாலும் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
குறிப்பாக காவல் பணியிலும், கேபிள் தோண்டும் பணியிலும்  
ஒப்பந்த ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கும் 
UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
இது அடிமட்ட ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும்.
உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்கள் 
தங்கள் உரிமை பெறுவது எந்நாளோ? 

Monday, 5 October 2015

ஆர்ப்பாட்டம்...



தற்காலிக போனஸ் வழங்கக்கோரி...

 மாவட்ட தலைவர் S.பிரின்ஸ் தலைமையில் மாவட்டசெயலர் T.பன்னீர்செல்வம் முன்னிலையில்
                ஆர்ப்பாட்டம்...

06-10-2015 - செவ்வாய்கிழமை
  காலை 10.30மணிக்கு 
                 இடம் : CTO  நுழைவாயில் ,
                         தஞ்சாவூர்.
போனஸ்... போராடிப் பெற்ற நமது உரிமை...
மீண்டும் போராடிப்பெறுவது... நமது கடமை...
போராடுவோம்... போனஸ் பெறுவோம்...
தயாராவீர்... தோழர்களே...
அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, 1 October 2015

வாழ்க.. நீ.. எம்மான்..
அக்டோபர் -2
அண்ணல் பிறந்த நாள்
 குப்பைக்குப் போனது..
உன் கொள்கைகள்... 
சுத்தமாகுது.. இந்தியா...