Wednesday, 16 September 2015
Sunday, 13 September 2015
JTO பயிற்சி வகுப்பு
02/11/2015 முதல்
JTO PHASE I பயிற்சி வகுப்பு துவங்குகிறது.
சென்னை RGMTTCயில்
34 பேர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளும்,
சென்னை மறைமலை நகர் RTTCயில்
30 பேர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளும்,
திருவனந்தபுரத்தில்
30 பேர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளும்,
நாக்பூரில் 30 பேர்களைக் கொண்ட
ஒரு வகுப்பும் நடைபெறவுள்ளது.
ஒட்டுமொத்தமாக அனைவருக்கும்
பயிற்சிக்கான உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தோழர்களிடத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
பயிற்சி செல்லும் தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..
Thursday, 10 September 2015
Monday, 7 September 2015
JTO பயிற்சி வகுப்பு
JTO பயிற்சி வகுப்புகள்
21/09/2015 முதல் துவங்கப்படும் என
மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம்
RGMTTC பயிற்சி நிலையத்தில்
28 தோழர்களுக்கும்,
சென்னை மறைமலை நகர்
பயிற்சி நிலையத்தில்
27 தோழர்களுக்கும்
முதற்கட்டமாக பயிற்சி
துவங்கப்படுகிறது.
பயிற்சிக்கு செல்லும்
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
Friday, 4 September 2015
செய்திகள்
வருமான வரித்தாக்கல் செய்வதற்கு 07/09/2015 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரித்தாக்கல் செய்யாத தோழர்கள்
NFTE சங்க அலுவலகத்தில் ON LINE மூலம்
வரித்தாக்கல் செய்து கொள்ளவும்.
போனஸ் வரையறையை இறுதி செய்யும் பணி இன்னும் தொடர்வதால் இந்தாண்டிற்கு தற்காலிக போனசை அறிவிக்கக் கோரி
நமது சங்கம் BSNL நிர்வாகத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
BSNL செல் கோபுரங்களைப் பிரித்து தனி அமைப்பாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்த மத்திய மந்திரி சபையின் முடிவை எதிர்த்து
செப்டம்பர் 16 அன்று நாடு தழுவிய தர்ணா நடத்த அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
தர்ணா தலைநகர் டெல்லி, மாநிலத்தலைநகரங்கள் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறும்.
தமிழ் மாநில செயற்குழு 23/09/2015 அன்று
மயிலாடுதுறையில் நடைபெறும்.
.
தமிழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட 10 மாநிலங்களின் வருமானம் குறைந்து வருவதால் கூடுதல் கவனம் செலுத்தி வருமானத்தைப்பெருக்க மாநில முதன்மைப்பொதுமேலாளர்களுக்கு CMD கடிதம் எழுதியுள்ளார்.
வாழ்த்துக்கள்
சங்கஅறை கூவல் ஏற்று வேலைநிறுத்தம் செய்தஅனைவரையும் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!!!
Subscribe to:
Posts (Atom)



