Tuesday, 11 August 2015
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்...
நமது BSNL நிறுவனத்தின்... 65000 செல் கோபுரங்களை...
தனி அமைப்பாக மாற்றுவதற்கு...
பரிந்துரை செய்த மத்திய அரசின்... BSNL விரோத...
பொதுத்துறை விரோத... முடிவைக் கண்டித்து...
NFTE சார்பாக...
12-08-2015 - புதன்கிழமை அன்று
சரியாக காலை 10 மணி
CTO வில் நடைப்பெறும்
நாடு தழுவிய... கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட...
மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.
மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.
நமது சொத்துகள்...
நாளும் கொள்ளை போவதோ?
நாம் அமைத்த 65,000 செல் கோபுரங்கள்...
நாளை கொள்ளைஅடிக்க விடுவதா?
நம்கண்ணின் இமை போல நம் செல்(வம்) காப்பது
நம் கடமை அல்லவோ?
தோழர்களே... போராடாமல் வென்றதில்லை...
போராடி நாம் தோற்றதில்லை...
நிறுவன நலன் காத்திட... ஆர்ப்பரிப்போம் தோழர்களே...
அனைவரும் வருக...! ஆர்ப்பரித்து வருக...!!
தோழமையுடன்...
தஞ்சை மாவட்ட சங்கம்
Saturday, 8 August 2015
செல்(லும்) கோபுரம்
நமது செல் கோபுரங்கள் விரைவிலேயே
நம்மை விட்டு செல்லும் கோபுரங்களாகி விட்டன.
BSNL வசம் உள்ள ஏறத்தாழ ரூ.20000/= கோடி மதிப்பிலான
65000 செல் கோபுரங்களை தனி அமைப்பாக மாற்றுவதற்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பணியைச் செய்து முடிக்க
தனி அமைச்சர்கள் குழு அமைக்கப்படும்.
அந்தக்குழு தனி நிறுவனம் அமைப்பதற்கான நடைமுறைகளை ஆராய்ந்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பும்.
செல் கோபுரங்களை தனியாக பிரிக்கக்கூடாது என்பது
ஊழியர் கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.
இதனால் BSNL மேலும் நலிவடையும்
என்பது ஊழியர் தரப்புக் கருத்து. ஆனாலும் வழக்கம் போலவே நிர்வாகமும் அரசும் ஊழியர் தரப்பை ஊதாசீனப்படுத்தி விட்டு
தாங்கள் நினைப்பதையே செயல்படுத்தி வருகின்றார்கள்.
மேலும் BSNLக்கு 169.16 கோடியும்,
MTNLக்கு 458.04 கோடியும் SPECTRUM REFUND
அலைக்கற்றை ஒப்படைப்பு பணமாக திருப்பிக் கொடுக்க
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாம் திருப்பி ஒப்படைத்த 800 MHz அலைக்கற்றையை
கடந்த மார்ச் மாதத்தில் தனியாருக்கு
20 ஆண்டுகளுக்கு ஏலம் விட்டு
அரசு ஏறத்தாழ 4000 கோடி லாபம்
சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாம் செலுத்திய 600 கோடி ரூபாய் பணத்தை
நமக்கு திருப்பி அளித்து விட்டு
நமது 20000 கோடி சொத்தான செல் கோபுரங்களை
நம்மிடமிருந்து அரசு அபகரித்துள்ளது.
இது என்ன வித்தையோ?
தமிழகத்தில் பல போராட்டக்காரர்கள்
செல் கோபுரம் ஏறி போராடுகிறார்கள்...
இன்று நாம்...
செல் கோபுரத்தையே காப்பதற்காக
போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
Tuesday, 4 August 2015
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட தலைமை பொதுமேலாளர் பதவிக்கு முதல் முறையாக பெண் அதிகாரி நியமனம்
அரசுத் தொலைத் தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளராக
என்.பூங்குழலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பி.எஸ்.என்.எல்.
இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வட்டத்தில் தலைமை பொது மேலாளராக
நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி பூங்குழலி ஆவார்.
இந்திய தொலைதொடர்பு சேவையின் 1979-ம் ஆண்டு அணியை சேர்ந்த என்.பூங்குழலி சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவி ஆவார்.
34 ஆண்டுகளாக தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொலைத் தொடர்புத்துறையில் தனது செயல்திறனை மேம்படுத்துவதற்காக கொரியா மற்றும் மலேசியாவில் சுவிட்சிங் தொழில்நுட்பம் தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார் என்று பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொலைதொடர்பு சேவையின் 1979-ம் ஆண்டு அணியை சேர்ந்த என்.பூங்குழலி சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவி ஆவார்.
34 ஆண்டுகளாக தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொலைத் தொடர்புத்துறையில் தனது செயல்திறனை மேம்படுத்துவதற்காக கொரியா மற்றும் மலேசியாவில் சுவிட்சிங் தொழில்நுட்பம் தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார் என்று பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் -2 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
அருமைத் தோழர்களே ! அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பொதுவான கோரிக்கைக்காக நடத்தவுள்ள செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தை நமது BSNL பகுதியிலும் முழுமையாக வெற்றிகரமாக்கிட ஊழியர்கள் மற்றும் மக்களிடம் விரைந்த, விரிவடைந்த பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.... இது குறித்த BSNLEU + NFTE மாநில சங்க சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும்
Tuesday, 28 July 2015
Designation Committee Meeting
Designation Committee Meeting : Designation Committee met today. Consensus reached on New Designations.
1) Regular Mazdoor - Telecom Assistant.
2) Telecom Mechanic - Telecom Technician
3) TTA - Junior Engineer.
4) Sr.TOA (NE11 & NE12 ) - Office Superintendent.
5) Other Sr.TOAs - Office Associate.
Monday, 27 July 2015
Monday, 6 July 2015
Thursday, 2 July 2015
1.7.15 முதல் 2.1% IDA உயர்வு....
IDA increase from 1st July, 2015 is 2.1%, with this IDA will be 102.6% w.e.f. 01.07.2015.
01-07-2015 முதல் IDA
2.1% சதம் உயர்ந்துள்ளது
இத்துடன் மொத்த IDA
(100.5% + 2.1%) 102.6% சதம் ஆகும்.
Subscribe to:
Posts (Atom)
























