Saturday, 14 March 2015

பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் ஏப்ரல் 21, 22 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் நடத்த உள்ள வேலைநிறுத்தத்திற்கு முறைப்படியான அறிவிக்கையை நிர்வாகத்திடம் தொழிற்சங்கங்கள் வழங்கியுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் எம்டிஎன்எல் நிறுவனத்தை இணைக்கக் கூடாது, பிஎஸ்என்எல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி உதவிகளை அளிக்க வேண்டும், தனியார் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடுகளை தவிர்க்க வேண்டும், தனியாருக்கு சாதகமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தகவல் கோபுர சேவைகளை பிரித்து தனி நிறுவனமாக்க கூடாது, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு சேவைகளை வலியுறுத்தி  பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முறைப்படியான அறிவிக்கையை நேற்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று வழங்கினர்.

அதேபோல் தொலைத் தொடர்புத்துறை செயலாளர், தலைமை தொழிலாளர் ஆணையர், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சரிடமும் வழங்கினர். வேலை நிறுத்த அறிவிக்கையில் அதிகாரிகள், ஊழியர்களுக்கான 15 சங்கங்களின் நிர்வாகிகள் கையெழுத்திட்டிருந்தனர்.
12.03.15-FORUM  டெல்லியில் வேலை நிறுத்த நோட்டீஸ்... 
அருமைத் தோழர்களே ! 12.03.15-அன்று நமது FORUM சார்பாக டெல்லியில்  வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது ... இங்கே கிளிக் செய்யவும். 

Thursday, 12 March 2015

தொடரும்... போராட்டங்கள்...



இன்று 12.03.2015 மாலை 5.00 மணியளவில் பாலாஜி நகர் GM- அலுவலக வாயில் ஆர்ப்பாட்டம் கூட்டம் தோழர் பழனியப்பன் SNEA தலைமையில் நடைபெற்றது.








Thursday, 5 March 2015

ஹோலி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...


TTA இலாக்காத்தேர்வு


TTA இலாக்காப் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு
தமிழக நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு 07/06/2015 அன்று நடைபெறும்.
3 மணி நேரத்தேர்வு. இரண்டு பகுதிகள் அடங்கிய ஒரே கேள்வித்தாள்.
OBJECTIVE TYPE  - குறியீட்டு முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
தவறான பதில்களுக்கு NEGATIVE MARKS
  25 சத மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
தமிழகத்தில் மொத்த காலியிடங்கள் 439. மாவட்ட வாரியான காலியிடங்கள் குறிப்பிடப்படவில்லை.
SC/ST காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு 3 சத இட  ஒதுக்கீடு செய்யப்படும்.
01/07/2014 அன்று  55 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.
01/07/2014 அன்று மொத்தம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் .
TM மற்றும் அதற்கு மேல் உள்ள கேடர்களில் சம்பள விகிதம் இருக்க வேண்டும். (9020-17430 சம்பள விகிதமும் அதற்கு மேலும்)
கல்வித்தகுதி:
+2 அல்லது  இரண்டாண்டு ITI அல்லது மூன்றாண்டு DIPLOMA.
விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.
 பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 20/04/2015.

பிப்ரவரி - 5, இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்!



பாசிச அபாயத்திலிருந்து 

பூவுலகை காத்த 

செம்படைக்கு தலைமையேற்ற

வீரத் தளபதி ஸ்டாலின் . . .  

Tuesday, 3 March 2015

GPF விண்ணப்பம்



   இம்மாத GPFவிண்ணப்பத்தை ஊழியர்களிடம் பெற்று  7ந்தேதிக்குள் மாநில அலுவலகத்திற்கு அந்த லிஸ்ட்டை அனுப்ப வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.

  ஆகவே, GPF விண்ணப்பங்களை உடனடியாக 5 தேதிக்குள் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்புமாறு  
கேட்டுக் கொள்கிறோம்.

03.03.15 பிறந்த நாள் . . .


Monday, 2 March 2015

3ஜி கட்டணத்தை 50% ஆக குறைக்க பிஎஸ்என்எல் திட்டம் ...

மொபைல் இன்டர்நெட் சேவைக்கான கட்டணங்கள் அதிகரித்து வரும் சூழலில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தமது 3ஜி டேட்டா கட்டணத்தை 50 சதவீத அளவில் குறைத்திட முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவ், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 3ஜி டேட்டா கட்டணங்களை 50 சதவீதமாக குறைக்கும் வகையிலான விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.தற்போது முன்னணி தனியார் நிறுவனங்கள் 2ஜி சேவைக்கு வசூலிக்கும் கட்டண அளவில்தான் பிஎஸ்என்எல் தமது மொபைல் இன்ட்ர்நெட் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பேஸ் 7 நெட்வொர்க் விரிவாக்கத் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. பேஸ் 8 நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியுள்ள இந்நிறுவனம், 2015-16 நிதியாண்டின் முதல் கலாண்டில் டெண்டர் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது."நாங்கள் 3ஜி கொள்ளளவில் 90 சதவீதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இப்போதே சேவைக் கட்டணத்தைக் குறைத்துவிட்டால், அதனால் திடீரென மிகுதியாக உயரும் டிராஃபிக்கையும் நெட்வொர்க்கையும் சமாளிக்க முடியாமல் போய்விடும். எனவே, பேஸ் 8-க்கு விரிவாக்கம் செய்த பிறகு, 3ஜி கட்டணத்தை குறைத்திட முடிவு செய்துள்ளோம்" என்றார் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவ்.

வரலாற்றில் இன்றைய தினம்


1995 - யாஹூ நிறுவனம் தொடங்கப்பட்டது.
.2006 – இந்தியாவும் - அமெரிக்காவும் அணு ஆயுத ஒப்பந்தம் செய்தது





1949 - இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்.


                          1930 - மகாத்மா காந்தி தண்டி யாத்திரை துவக்கினார்.




                                


.