Friday, 14 November 2014

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு



நம் நாடு உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு. சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு இங்கு சர்க்கரை  நோயாளிகள் அதிகம் உள்ளனர். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு வகைகளும், போதிய உடற்பயிற்சியும் இல்லாததால் தான்அதனால் நம் உணவு பழக்கவழக்கங்களை மாற் றிக் கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க வாய் ப்புள்ளது.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பு, கொலஸ்டிரால் போன்ற நோய்களும் உடன் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சர்க்கரை  நோயாளிகள் இதனையும் கண்டுபிடித்து கட்டுப்படுத்தி கொள்வது அவசியம்.

வருந்துகிறோம்!




மாநிலச்செயலர் தோழர் பட்டாபியின் தாயார் இன்று காலமானார். பிரெஞ்ச் டீச்சர்ஸ் தெரு, காரைக்காலில் அவரது இறப்பு நிகழ்ந்தது. அன்னையை இழந்து வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
இறுதி  நிகழ்ச்சிகள்  நாளை காலை 8.00 மணியளவில்        (15- 11-2014)   நடைபெறும் .



அவருக்கு நமது தஞ்சை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவிக்கின்றோம்.

NOV 14


நவம்பர் - 14 குழந்தைகள் தினம்



ஒரே செடியில் தக்காளி, உருளை காய்க்கும் அதிசயம்!

டோம்டேடோ என்ற செடியில் தக்காளியும் காய்க்கிறது, உருளைக் கிழங்கும் காய்க்கிறது. அதாவது செடியின் மேல் பகுதியில் தக்காளிகள் காய்த்துக் குலுங்குகின்றன, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்குகள் காய்த்திருக்கின்றன. தக்காளியையும் உருளைக்கிழங்கையும் இணைத்து டோம்டேடோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பே இதுபோன்ற முயற்சிகள் இருந்திருந்தாலும், தற்போதுதான் வணிக அளவில் வந்திருக்கிறது.

தக்காளியின் தண்டையும் உருளைக்கிழங்கின் தண்டையும் இணைத்து இந்தச் செடி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மரபணு மாற்றத்தால் உருவாக்கப்பட்ட செடி இல்லை. முழுக்க முழுக்க இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட செடி. 15 ஆண்டு கால உழைப்பில் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது என்கிறார் இதை உருவாக்கிய தோட்டக்கலையின் டைரக்டர் பால் ஹான்சார்ட். ஒரே செடியில் விளைந்த தக்காளி அதிக இனிப்புச் சுவையுடன் காணப்படுகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட தக்காளிகள் இந்தச் செடியில் இருந்து பறிக்கப்பட்டுள்ளன என்பது குறிபிடத்தக்கது.

Thursday, 13 November 2014

உலக சாதனை




Photo: #RohithSharma #Sharma200 சாதனை மேல் சாதனை படைத்தார் : ரோகித் மீண்டும் இரட்டை சதம்

கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா 2வது முறையாக இரட்டை சதம் அடித்ததுடன், 264 ரன் குவித்து ஒருநாள் அரங்கில் அதிக ரன் விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனை நிகழ்த்தினார். 33 பவுண்டரி அடித்து அதிலும் உலக சாதனை படைத்தார். இவரது அதிரடியில் 404 ரன் குவித்த இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி 4,0 என முன்னிலை பெற்றுள்ளது...

மேலும் படிக்க : http://goo.gl/XZEq2O






சாதனை மேல் சாதனை படைத்தார் : ரோகித் மீண்டும் இரட்டை சதம்

கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா 2வது முறையாக இரட்டை சதம் அடித்ததுடன், 264 ரன்

NOV 13

Add caption





Wednesday, 12 November 2014

Monday, 10 November 2014

மீத்தேன் அரக்கன் பற்றி சில தகவல்கள்

1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க நிலக்கரி இருக்கும் மட்டம் வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.

2.கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும் தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.


3.அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.

4.கடல் நீர் உள் நுழையும்.

5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.

6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும்.நிலநடுக்கங்கள் ஏற்படும் .

7.குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப் போகும்.

8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இட பயன்படுத்திய ரசாயனங்கள், மீத்தேன் ஆகியவை கலக்கும்.
இச்செயல் முறை மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக நாசம் செய்யும்.

ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும் இடம் 691 சதுர கிலோமீட்டர் .ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர் அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும்.

மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும் மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூரும் தான். இதனால் காற்றும் மாசுபட போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.

ஒட்டுமொத்தமாக இப்பகுதி பாலைவனமாய் மாற போவதால் 50 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கிறது..சென்ற அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டம் காரணமாய் இந்த அரசு தற்காலிகமாய் நிறுத்தி வைத்துள்ளது.ஜனவரி 30, 2015 அன்று முடிய போகும் இந்த ஒப்பந்தம் மட்டும் மீண்டும் தொடர்ந்தால் .....தமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது..அதற்கு முன் மக்கள் விழித்தெழ வேண்டியது மிக அவசியம் மற்றும் அவசரமும் கூட.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்தமாத சம்பளம்


கிறிஸ்துமஸ்


விழாக்கால முன்பணம் 

தமிழகத்தில் ERP அமுல்படுத்தப்படுவதால் 
டிசம்பர் மாதம் எந்த வித பணப்பட்டுவாடாக்களும் இருக்காது. 

எனவே டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விழாவிற்கு
 விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE
 விண்ணப்பிக்க விரும்பும் ஊழியர்கள் 
நவம்பர் 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என
 மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

நவம்பர் மாதமே கிறிஸ்துமஸ் 
விழாக்கால முன்பணம் வழங்கப்படும்.

Saturday, 8 November 2014

வீரமாமுனிவர் 10

கத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் இன்று-.09 அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

 மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.

 கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

 இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

 வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

 அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.

 தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

 உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.

இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.

 தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

1917 NOVEMBER


NOV 8


Friday, 7 November 2014

நவ்.:7 இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்த தின சிறப்பு பகிர்வு

 
 


NOV 07



Thursday, 6 November 2014

Wednesday, 5 November 2014

செய்திகள்


A.P.J.ABDUL KALAM


ERP

தமிழகத்தில் ERP அறிமுகம் தள்ளிவைப்பு !!

     ERPயை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன் நடவடிக்கைகளும்  மேற்கொள்ளாமல்,  சங்கங்களுடன்    கலந்து 
பேசாமல் அவசரகதியில் இம்மாதம் ERP தமிழகத்தில்  அறிமுகப்
படுத்தப்படும் என்று அறிவித்து கணக்குகுகள் close செய்யப்பட்டு 
HR package கூட முடக்கப்பட்டது. 

    இறுதியில் பல பணிகள் இன்னும் செய்யவேண்டி உள்ளதால் 
அடுத்த மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

   இதன் காரணமாக இம்மாதம் GPF பட்டுவாடா  இருக்கும் 


 வாழ்த்துவோம் ! மனம் மகிழ்ந்து  !!

கரூரில் தோழர்களை சந்தித்தபோது, நம் அனைவரையும் 
மகிழ்விக்கும் செய்தியை அறிந்தோம். கரூரில் SDEயாக பணியாற்றும் 
நம் அனைவருக்கும் பரிச்சயமான தோழர் விமலாதித்தன் அவர்கள் 
"வாசிப்பதை சுவாசிப்போம்"  

என்ற லட்சிய  நோக்கத்தோடு கரூர் மாவட்டத்தில்   
ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்களை 
நல்ல நூல்களை வாசிக்கும் நற்செயலுக்கு ஈர்ப்பது, 

இளைஞர்களை IAS IPS தேர்வு எழுதிட பயிற்றுவித்து  தேர்ச்சிபெற வைத்தது, அப்பணியை தொடர்வது போன்ற நற்செயல்களை பாராட்டி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவின்போது, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (மாவட்ட கலெக்டர்)   சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்த செய்தியை அறிந்து மகிழ்ந்தோம்.
 அனைவரும் அறிய இச்செய்தியை வெளியிடுவதில் 
பெருமை கொள்கிறோம்  
    

Monday, 3 November 2014

நவம்பர் 04 முகரம்


முகரம்
இஸ்லாமியர்களின் புது வருடம் 
முகரம்...
முஸ்லிம் சகோதரர்களின் 
முதல் மாதம்...
கர்பலா போரில்..
கடமை செய்து உயிர் துறந்த..
நபிகள் நாயகம் அவர்களின் பேரன் 
இமாம் ஹுசைனின்..
தியாகத்திருநாள்...
நினைவு கூர்வோம்...

வேலை வாய்ப்பு

  இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பட்டதாரி இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு



மத்திய அரசின் நவரத்னா அந்தஸ'து பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப'பரேஷன் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்திற்கு 188 ஆக உள்ளது.இதன் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையங்களில் காலியாக உள்ள 'கிராஜூவேட் இன்ஜினியர்கள்' பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Sunday, 2 November 2014

மெட்ராஸ் ஐ எஸ்கேப் ஆவது எப்படி?

மெட்ராஸில் 1970--களின்போது கண்களை ஒரு புதுவிதக் கண் நோய் தாக்கியது.  மெட்ராஸில் அந்த நோயைக் கண்டுபிடித்த காரணத்தால், ‘மெட்ராஸ் ஐ’ எனப் பெயர் வைத்தார்கள். இது மிக வேகமாகப் பரவக்கூடியது. முன்பு வெயில் காலங்களிலும், மழை சீசன் தொடங்கும்போதும் வந்த இந்த கண் நோய், இப்போது எல்லா சீசன்களிலும் வருகிறது. அடினோ (Adeno) வைரஸால் வரும் இந்த நோயை, மருத்துவ மொழியில் ‘வைரல் கன்ஜன்சிவிடிஸ்’ (viral conjuncivitis) என்பார்கள். மிகமிக வேகமாகப் பரவும் இந்த நோய், நிச்சயம் பரவும் வாய்ப்புள்ளது.
‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பை எப்படிக் கண்டறிவது?
கண்கள் சிவந்திருக்கும், கண்களில் மண் இருப்பது போன்று அரிப்பு ஏற்படும், கண்கள் வீங்கிவிடும், கண்களில் எப்போதும் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். சிலருக்கு முகத்தில் நெறி கட்டிக்கொள்ளும். தொண்டை வலியும், காய்ச்சலும்கூட ஏற்படும்.
‘மெட்ராஸ் ஐ’யை எப்படித் தவிர்ப்பது?
மெட்ராஸ் ஐ’ வராமல் தடுக்க எந்த மருந்தும் கிடையாது. இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்ப்பதன் மூலம் நோய் பரவுவது இல்லை. சம்பந்தப்பட்ட நபர் உபயோகித்த பொருள்கள் மூலமோ, பாதிக்கப்பட்டவரது கண்ணீரின் மூலமோதான் பரவும். ‘மெட்ராஸ் ஐ’  பாதிக்கப்பட்டவர், கண்களைக் கசச்கிய பிறகு பயன்படுத்தும் பொருட்கள் மீது, மற்றவர்கள் கை வைத்தால் கிருமி அவரது கையிலும் தொற்றிக்கொள்ளும். அவர் தன் கண்களைத் தொடும்போது, கிருமி கண்ணில் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர் கண்ணைத் தொட்டாலோ, பாதிக்கப்பட்டவருக்குக் கண்ணில் மருந்துவிட நேர்ந்தாலோ, கையை சோப் போட்டுக் கழுவ வேண்டும். அவரின் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.